28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
adobestock 27
ஆரோக்கியம் குறிப்புகள்

ஜாக்கிரதை! நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாதாம்!

நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்கள் நீரிழிவு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய சில பழங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மாம்பழம்
ஒவ்வொரு 100 கிராம் மாம்பழத்திலும் சுமார் 14 கிராம் சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை இது அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

சப்போட்டா
சப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. ஒவ்வொரு 100 கிராம் கொண்ட ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும்.

திராட்சை
திராட்சையில் ஊட்டச்சத்துகள் பல நிறைந்திருந்தாலும் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. 85 கிராம் திராட்சையில் 15 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் திராட்சைகளை ஒருபோதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

உலர்ந்த கொடிமுந்திரி
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதன்மை பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாகும். 103 இன் ஜி.ஐ மதிப்புடன், நான்கில் ஒரு கப் பரிமாறலில் உலர்ந்த கொடிமுந்தரியில் 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சீத்தாப்பழம்
நீரிழிவு நோயாளிக்கு சீத்தாப்பழம் நல்லதல்ல. சுமார் 100 கிராம் கொண்ட ஒரு சிறிய பழத்தில் 23 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. சில ஆய்வு முடிவுகள் நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம், ஆனால், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

தர்பூசணி
நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள தர்பூசணி ஜி.ஐ. மதிப்பை 72 ஆகக் கொண்டுள்ளது. அரை கப் தர்பூசணியில் சுமார் 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கலாம். இந்த பழத்தை மிகக்குறைவாக உண்ணலாம் எனக் கூறப்படுகிறது.

பப்பாளி
பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்தால் அது இரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு மிகக் குறைந்த அளவில் பப்பாளி பழம் உண்ணலாம்.

Related posts

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?…

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியமும் : முக்கிய குறிப்புகளுடன்,,,!

nathan

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan

உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா?

nathan

இத படிங்க வெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

useful tips .. தீ கொப்பளம் இப்படி நீர் கோர்த்து புடைத்துக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பதறாமல் இதை மட்டும் செய்தால் போதுமாம்!

nathan