30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
14 mealmaker biryani
ஆரோக்கிய உணவு

சுவையான மீல் மேக்கர் பிரியாணி

மதியம் எப்போதும் சாம்பார், சாதம், ரசம், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால் இன்று மீல் மேக்கர் பிரியாணி செய்து சுவையுங்கள். இந்த மீல் மேக்கர் பிரியாணி செய்வது மிகவும் சிம்பிள். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

இங்கு அந்த மீல் மேக்கர் பிரியாணியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Soya Chunks Biryani Recipe
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 1/4 கப்
மீல் மேக்கர் – 3/4 கப்
வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தக்காளி – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – 1/4 கப்
புதினா – 1/8 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை – 1/4 இன்ச்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1

செய்முறை:

முதலில் ஒரு கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் மீல் மேக்கர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கினால், மீல் மேக்கர் பிரியாணி ரெடி!!!

Related posts

தக்காளி குழம்பு

nathan

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்

nathan

சுவையான பட்டாணி சுண்டல்

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

சூப்பர் டிப்ஸ்! இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும் சில இயற்கை பானங்கள்…!!

nathan

பன்னீர் செட்டிநாடு

nathan

நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை தயவுசெய்து சாப்பிடாதீங்க… என்னென்ன பழங்கள்னு தெரியுமா?

nathan

சுவையான பச்சை பட்டாணி சட்னி

nathan

உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பது, மஞ்சள்

nathan