23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 marathi prawn curry
ஆரோக்கிய உணவு

சுவையான மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு

இதுவரை இறாலைக் கொண்டு பலவாறு சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்ததுண்டா? இல்லையெனில், இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Marathi Prawn Curry
தேவையான பொருட்கள்:

இறால் – 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 (அரைத்தது)
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி!!!

Related posts

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்

nathan

கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

nathan

குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம் என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சுவையான கத்திரிக்காய் மசாலா

nathan

சுவையான கோங்குரா தொக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?

nathan

உங்க சாப்பாட்டில் உப்பைக் குறைக்க நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

nathan