குழந்தைக்கும் தாய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தையை கருவில் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல மனநிலையுடனும் பிறக்கும். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நாள்பட்ட மனஅழுத்தம்
பெண்கள் மனஅழுத்தத்துடன் இருப்பது குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. அதுவும் ஏழை பெண்கள், பல வேலைகளைக்கு செல்லும் பெண்கள், குறைந்த சம்பளத்திற்காக அதிகமாக கஷ்டப்படும் பெற்றோர்கள் நீண்ட நாள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். இவர்களது பிரச்சனைகளை குழந்தைகளை பாதிக்கிறது.
உறவு பிரச்சனைகள்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை குழந்தைகள் முன்னர் மறந்தும் நடத்தக்கூடாது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனையில் குழந்தையை கவனிக்காமல் இருப்பது, அல்லது கோபத்தை குழந்தை மீது காட்டுவது கூடாது.
கணவன் மனைவி வயது
கணவன் மனைவி இருவருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு வயது வேறுபாடு இருத்தல் வேண்டும். மிக அதிக வயது வேறுபாடுகள் கூட மனஅழுத்தத்தை உண்டாக்கும்.
வாய்ப்புகள் குறைவு
இளங்கலை படிப்பு முடித்த ஒரு பெண்ணுக்கு தனது 40 வயதில் 3.7 சதவீதம் குழந்தை பெறும் திறன் குறைகிறது. மேலும் 30 லிருந்து 34 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு 1.7 குழந்தை பெறும் திறன் குறையும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
சிறு வயதிலேயே குழந்தை
சிறு வயதிலேயே குழந்தை பெறும் ஏழை பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவர்களது இந்த நிலைக்கு காரணம் சமூக பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் ஆகியவையாக இருக்கலாம்.