29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
tomato 15
ஆரோக்கிய உணவு

உடல் எடையைக் குறைக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடையில் இருப்பதைக் குறிக்கும். இப்பிரச்சனை ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கை முறைகளான கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, அதிகமாக மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தூக்கமின்மை போன்றவை காரணங்களாகும். மரபணு காரணிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளும், உடல் பருமன் பிரச்சனையின் அபாயத்தை அதிகரிக்கும்.

ஒருவர் அளவுக்கு அதிகமான எடையில் இருந்தால், அதனால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், ஆர்த்ரிடிஸ் மற்றும் பல குறிப்பிடத்தக்கவை. எனவே உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஒரு செயலை ஒருவர் பின்பற்றினாலே உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அதோடு குறிப்பிட்ட சில எளிய இயற்கை வைத்தியங்களின் உதவியுடனும் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். உங்களுக்கு அந்த எளிய வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள். இந்த வழிகள் அனைத்தும் பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள். அதோடு ஆயுர்வேத வைத்தியங்களும் உடல் எடையைக் குறைக்க இந்த வழிகளைத் தான் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றன.

சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் எளிய இயற்கை வழிகளைக் காண்போம் வாருங்கள்.

எலுமிச்சை

உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒருவரது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். ஒருவரது உடலில் செரிமானம் ஆரோக்கியமாக நடைபெற்றால், கொழுப்புக்களைக் கரைக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கும் டாக்ஸின்களை அகற்றவும் உதவும்.

எடுக்கும் முறை:

* ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை தொடர்ந்து குறைந்தது 3 மாதம் குடிக்க, எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* இல்லாவிட்டால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றொரு அற்புதமான உடல் எடையைக் குறைக்க உதவும் பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவி, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கும். இதன் விளைவாக உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

எடுக்கும் முறை:

* ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன்னும் குடிக்க வேண்டும்.

* வேண்டுமானால் ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் கலந்து குடிக்கலாம்.

* முக்கியமாக ஆப்பிள் சீடர் வினகரை ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது. அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைக் குறைப்பதோடு, எலும்புகளின் அடர்த்தியையும் குறைத்துவிடும்.

கற்றாழை

கற்றாழையும் உடல் பருமனைக் குறைக்க உதவும். ஏனெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும், ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் உபயோகிக்கப்படாத தேவையில்லாத கொழுப்புக்களை வெளியே அகற்றும். இதில் உள்ள இயற்கையான கொலாஜென் புரோட்டீன், உடலுக்கு நல்ல கடின வேலையைக் கொடுக்கும். மேலும் கற்றாழை செரிமான மண்டலம் மற்றும் குடலில் உள்ள டாக்ஸின்களை நீக்க உதவும்.

எடுக்கும் முறை:

* கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1 கப் சிட்ரஸ் ஜூஸ்களான ஆரஞ்சு அல்லது கிரேப்ஃபுரூட் அல்லது வெறும் நீரை மட்டும் ஊற்றி, 2-3 நிமிடம் அரைத்துக் கொள்ளுங்கள்.

* இந்த பானத்தை தினமும் ஒரு முறை என ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க, நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ மிகவும் பிரபலமான உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் அற்புத பானம். க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்கள், கொழுப்புக்களை உறிஞ்சி உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புக்களை எரிபொருளாக மாற்றி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் க்ரீன் டீயில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டு, ஜிங்க், செலினியம், குரோமியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே எடையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் 3-4 கப் க்ரீன் டீ குடியுங்கள். அதிலும் க்ரீன் டீயுடன் இஞ்சி சாறு அல்லது மிளகுத் தூள் சேர்த்துக் குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வரமிளகாய் தூள்

வரமிளகாய் தூள் உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள கேப்சைசின், கொழுப்புக்களைக் கரைக்கத் தூண்டுவதோடு, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு, இது செரிமானத்தைத் தூண்டி, அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தும்.

எடுக்கும் முறை:

* ஒரு டம்ளர் சுடுநீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப்பை ஒன்றாக கலந்து, அதில் சிறிது வரமிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

* முக்கியமாக அன்றாட சமையலில் வரமிளகாயுடன், இஞ்சி, மிளகு, கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும் வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.

கறிவேப்பிலை

ஒருவர் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதன் மூலம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்கலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதிலும் இந்த செயலை குறைந்தது 3-4 மாதம் தொடர்ந்து செய்தால், உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆய்வுகளில் கறிவேப்பிலையில் உள்ள மஹாநிம்பைன் என்னும் அல்கலாய்டு, உடல் பருமனை எதிர்ப்பதோடு, கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையுடன், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளி

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 தக்காளியை சாப்பிடுங்கள். அதுவும் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் டயட்டரி நார்ச்சத்து உள்ளது. தக்காளியில் உள்ள உட்பொருட்கள், ஹார்மோன்களை சரிசெய்து, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மக்னீசியம், மாங்கனீசு, கோலின், ஃபோலேட் மற்றும் இதர உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. அதோடு. தக்காளியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? இதில் உள்ள டார்டாரிக் அமிலம், சர்க்கரை மற்றும் இதர கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்புக்களாக மாறுவதைத் தடுக்குமாம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரி குறைவான அளவிலும் உள்ளது.

அதோடு, இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஈஸ்ட்ரோஜென் ஏற்றத்தாழ்வுகளைத் தடுத்து, உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் செய்து, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பல பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

சோம்பு

ஆம், நம் வீட்டு சமையலறையில் உள்ள சோம்பு கூட உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் சிறுநீர் பெருக்கி பண்புகள் உள்ளன. இந்த பண்புகளால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் சிறுநீரின் வழியே வெளியேறி உடல் எடையைக் குறைக்கும்.

* சோம்பை வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இச்செயலால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

* இந்த சோம்பு நீரை ஒவ்வொரு வேளை உணவும் உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.

தேன் மற்றும் பட்டை

தேன் மற்றும் பட்டை மெட்டபாலிசத்தை மேம்படுத்து, ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும். இந்த அனைத்து செயலால் உடல் எடை குறையும். முக்கியமாக தேன் கொழுப்புக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து, உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும். பட்டை, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவும்.

எடுக்கும் முறை:

* ஒரு டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தில் பாதியை காலையில் வெறும் வயிற்றில், அதுவும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். எஞ்சியதை இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

Related posts

செரிமான பிரச்சனையை குணமாக்கும் அப்ரிகாட் பழம்

nathan

மிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.!!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிச்சடி

nathan

தெரிஞ்சிக்கங்க… பச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

nathan

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்!…

sangika

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைக்க – பருக்களை நீக்க பச்சை ஆப்பிள் போதும்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு கரோனா பாதிப்பா?… என்ன சாப்பிடுவது?

nathan