23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
coverzodiacdeepestconn
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்!

ராசிகள் குறித்து ஆராயும் பொழுது ஒரு தனி நபர் வாழ்க்கை பற்றி அனைத்தும் கூறப்படுகிறது. ஒருவரின் பொருளாதார நிலை உயர்வு – வீழ்ச்சி, தொழில் லாப – நட்டம், ஒருவருக்கு திருமணம் யோகம் எப்போது இருக்கும் என்று அனைத்து பற்றியும் கூறப்படுகிறது ராசி ஜோதிடத்தில்.

மொத்தம் இருக்கும் 12 ராசிகளில், அனைத்து வகையிலான ராசி ஜோடிகளும் திருமண பந்தத்திற்கு சரியாக பொருந்துவதில்லை. சில ராசிகள் யோகா பொருத்தமாக இருக்கும். சிலவன பூஜ்ஜியமாக இருக்கும்.

இதில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியனது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபத்தை என அனைத்தையும் அள்ளித்தரும் ஜோடிகளாக கருதப்படுகின்றன…

துலாம் – விருச்சிகம்!

துலாம் மற்றும் விருச்சிகம் ஒன்றிணையும் போது, அவர்களுக்கு இடையே உருவாகும் ரொமான்ஸ் ஆனது இருவருக்கு இடையே இரகசியமாக காக்கப்படும். துலாம் காதல் மற்றும் ஆசைகளில் பேரார்வம் கொண்டவர்.

மறுபக்கம் விருச்சிகம் தங்கள் துணை மீது ஈடில்லா பாசம் பொழியும் நபர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்கள் இருவரின் உறவானது கடைசியில் சிறந்த ஜோடியாக திகழவும்.

மீனம் – கடகம்!

உணர்வு ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் இவர்கள் ஒரு சிறந்த ஜோடி. இவர்கள் இருவரும் உணர்ச்சியின் வலையில் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். ஒருக்கட்டதில் வெளியுலகை மறந்து ஒருவர் மீதான ஒருவர் காதலில் மூழ்கி திளைப்பார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சமநிலையில் இருப்பார்கள். பர்ஃபெக்ட்டான ஜோடியாக திகழ்வார்கள்.

தனுசு – மேஷம்!

இந்த இரு ராசியும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் காதலை உலகறிய செய்ய கருதுபவர்கள். அறிவு சார்ந்து மிகவும் கூர்மையாக செயற்பட கூடியவர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் போது அவர்கள் முதலில் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள், பிறகு மெல்ல, மெல்ல காதலில் திளைத்து சிறந்த ஜோடியாக மாறுவார்கள்.

மிதுனம் – கும்பம்!

ஒருவருடன் ஒருவர் சமநிலையில் பழக கூடியவர்கள். மிதுனம் எதிலும் நிச்சயமற்று இருப்பவர்கள், மறுபுறம் கும்பம் எதையும் யோசித்து கவனமாக செய்யக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் சேரும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது உருவாகும். இதனால், உறவை சமநிலையில் வழிநடத்தி சென்று வெற்றி பாதையை எட்டுவார்கள்.

கன்னி – ரிஷபம்!

கன்னி மற்றும் ரிஷபம் ஒன்றிணையும் போது அவர்களுக்கு வெறும் உறவு மட்டுமின்றி, இவர்கள் ஒரு சிறந்த தொழில் சார்ந்த பார்ட்னர்களாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர்களது கூட்டு லாபகரமான தொழிலை அமைத்துக் கொடுக்கும். இல்லறம், வேலை, தொழில், வெற்றி என்று அனைத்திலும் தங்கள் சமப்பங்கினை அளிக்க இவர்கள் மறுக்க மாட்டார்கள்.

மகரம் – சிம்மம்!

மகரம் எந்த ராசிக்கும் வளைந்துக் கொடுத்து போகக் கூடிய ராசி ஆகும். முக்கியமாக சிம்மம் என்றால் நூறு சதவிதம் பொருந்தும். மகரம் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான ராசி. ஆனால், சிம்மம் எதையும் சம அளவில் பார்த்து, ஆராயும் ராசி. இவர்கள் இருவர் மத்தியில் உணர்ச்சி ரீதியான உறவும், பிராக்டிகலான உறவும் சமநிலையில் அமையும். இவர்கள் தங்கள் இல்லறத்தில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.

Related posts

இந்த பெண்ணை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் -பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

இந்த 5 ராசிக்காரங்க வெளிய வலிமையானவங்களா தெரிஞ்சாலும் மனதளவில் ரொம்ப பலவீனமானவங்க…

nathan

உங்க வீட்ல இந்த பொருள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகள் கேட்கும் 6 எடக்குமடக்கான கேள்விகள்!

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!

nathan

கர்ப்ப காலத்தில் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா?…

nathan

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

சிறந்த திருமண பொருத்தம்

nathan

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்…

nathan