காலையில் ஜிம் செல்பவர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ராகி மால்ட் மிகவும் ஆரோக்கியமான பானம். டீ அல்லது காபி போன்ற பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த ராகி மால்ட் குடித்தால், உடல் வலிமையுடன் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ராகி மால்ட் கொடுப்பது மிகவும் நல்லது.
இத்தகைய ராகி மால்ட்டை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அதனை செய்து குடித்து உங்கள் தினத்தை ஆரோக்கியமாக ஆரம்பியுங்கள்.
Badam Ragi Malt
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பால் – 2 கப்
தண்ணீர் – 1/2 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ராகி மாவை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3-5 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 1/2 கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் ராகி மாவை சேர்த்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் ராகி பேஸ்ட், மீதமுள்ள ராகி மாவு மற்றும்ட சர்க்கரை சேர்த்து கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
இறுதியில் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறினால், பாதாம் ராகி மால்ட் ரெடி!!!