28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 151
ஆரோக்கியம்

தெரிந்துகொள்வோமா? உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்ற வேலை எது தெரியுமா?

அடித்து பிடித்து படித்து பட்டம் வாங்கினாலும் டிகிரி வாங்குவது தான் குதிரை கொம்பாக இருக்கிறது. வருடக் கணக்கில் வேலைக்காக தேடி அலைந்து கிடைக்கப் போகும் நேரத்தில் ஏதேனும் சப்பை காரணங்களுக்காக அந்த வேலை கிடைக்காமல் போகலாம்.

இப்படி பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக நீங்கள் உணர்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கு காரணம் உங்களது கிரகநிலையாக கூட இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு உங்களது கிரகநிலையின் படி யார் யாருக்கு எந்த வேலை வாய்ப்பு அமையும், யாருக்கு வேலையில் பின் தங்கும் நிலை ஏற்படும் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

#1

மேஷம்,சிம்மம் மற்றும் தனுஷு ஆகிய ராசிக்காரர்களுக்கு நெருப்பு பிரவேசம் இருக்கிறது. இவர்களுக்கு எப்போது பிறரை விட தலைமைப் பண்பு அதிகமாக இருந்திடும். எப்போதும் பிறரை விட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். பிறருக்கு உற்சாக அளிக்கக்கூடிய வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிம். இரும்பு நெருப்பில் தன்னையே உருக்கி செதுக்கிக் கொள்வது போல வேலைக்காக என்றே தன்னையே உருக்கிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பற்று கொண்டிருப்பார்கள்.

#2

ரிஷபம்,கன்னி மற்றும் மகரம் இந்த ராசிக்காரர்களை எர்த் சையின் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் எதையும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.

இவர்களது வேலையில் அதிக மெனக்கடல்கள் தெரியும். ஒரு நாளில் வெற்றி என்ற கான்சப்ட்டில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. உழைக்க தயங்கவும் மாட்டார்கள். கார்ப்ரேட் உலகத்தில் இவர்கள் நிச்சயம் தடம் பதிப்பார்கள்.

#3

மிதுனம், துலாம், கும்பம் இவர்கள் காற்றைப் போல. உடல் உழைப்பு இல்லாத வொயிட்காலர் ஜாப் தான் அதிகம் விரும்புவார்கள். இவர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தியாக இருக்கும்.

#4

கடகம்,விருச்சிகம் மற்றும் மீனம் இவர்கள் தண்ணீரைப் போன்றவர்கள். தண்ணீர் நம்முடைய எமோஷன்ஸுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இவர்கள் மிகவும் உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பர்.

தனிப்பட்ட திறமையால் முன்னேறி களம் கணடவர்களாக இருவர்கள் இருப்பார்கள்.

மேஷம் :

இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட உற்சாகத்துடன் செயல்படுவார்கள். தானாக சோர்ந்து போகாமல், வெளி விஷயங்களாலும் தங்களை சோர்ந்து போகச் செய்யாமல் கவனமாக பார்த்துக் கொள்வார்கள் சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக மெனக்கெடல்கள் இருக்கும்.

இவர்கள் சூய தொழில், விற்பனை,பொழுதுபோக்கு, ஸ்டாக் , மீட்பு பணி ஆகியவற்றில் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்கக்கூடிய டெஸ்க் வொர்க் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் :

தன் இலக்கை அடையவதற்கு இவர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். தான் நினைத்தது அடையும் வரை உறுதியுடன் போராடுவார்கள். இவர்கள் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராமிங், டெக்னிக்கல் ,மேலாளர் பதவி ஆகியவை செய்யலாம்.

பணம் மற்று கணக்கு வழக்குகள் தொடர்பான வேலைகளை தவிர்த்து விடுவது நல்லது.

மிதுனம் :

இவர்களுக்கு எதுவாக இருந்தாலும் உடனே முடித்துவிட வேண்டும். வேக வேகமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எதையும் சந்தேகத்துடன் அணுகுவதால் எடுத்த வேலை முடிப்பதில் சிரமங்கள் உண்டாகும். அதே போல ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை சேர்த்து முடிக்க முயற்சித்து தோற்றுப் போவதும் உண்டு. பெரும்பாலும் இவர்களுக்கு கவனச்சிதறல் அதிகம் இருக்கும்.

இவர்களுக்கு க்ரியேட்டிவான மீடியா துறை,விளம்பரத்துறை போன்றவற்றிலும் அதிக அலைச்சல் கொடுக்கக்கூடிய பத்திரைகையாளர்,டெலிவரி போன்ற வேலைகளைச் செய்யலாம். அதிக தகவல்கள் சேகரித்து வைக்கக்கூடிய பொறுப்பாளர் பணி ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும்.

கடகம் :

பெரும்பாலும் அமைதியாக தானுண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார்கள். பிறருடைய உற்சாகத்தால் மட்டுமே இவர்களது ஓடம் ஓடும். அடிக்கடி சோர்ந்து போய் விடுவார்கள். ரியல் எஸ்டேட், வீட்டு அலங்காரம், சைக்காலஜி, ஆசிரியர் போன்ற பணிகள் இவர்களுக்கு ஏற்றது.

நீண்ட நேரம் ஒரேயிடத்தில் கவனத்தை குவிக்கிற மாதிரியான வேலைகளை தவிர்த்திடுங்கள்.

சிம்மம் :

உறுதியுடன் செயல்படுபவர்கள், பிறரை வேலை வாங்கும் ஆற்றல் இவர்களிடத்தில் அதிகம் உள்ளது. இவர்களது பெர்ஸ்னாலிட்டியால் அதிக நண்பர்களைச் சேர்ப்பார்கள். சுய தொழில், பொழுது போக்கு உட்பட மக்களிடம் அதிக நெருக்கமான பணியினை இவர்கள் மேற்கொள்ளலாம்.

ஒரேயிடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கம்ப்யூட்டர் ப்ரோக்கிராமிங் தொடர்பான வேலைகளை தவிர்த்திடுங்கள்.

கன்னி :

இவர்களுக்கு நுணுக்கமான விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொள்ளும் திறமை இருக்கும். மிகவும் நுண்ணிய தகவல்களை மனதில் நிறுத்தி ஆராய்ந்து தகவல்கள் சேகரிப்பதில் கில்லாடி.

அதனால் இவர்கள் எடிட்டர், நிதி ஆலோசகர்,டிசைனர்,ஆகிய வேலைகளை செய்யலாம். பிறரிடம் உங்களது நிதி தொடர்பான தகவல்களை பகிரும் போது கவனமாக இருக்கவும்.

துலாம் :

எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்து விடுவார்கள் ஆனால் முடிவெடுப்பதில் தான் இவர்களுக்கு சிரமங்கள் இருக்கும். நெருக்கடியில் இவர்களால் பணியாற்ற முடியாது அப்படியே இவர்களை வேலை வாங்க நினைத்தாலும் இருவருக்கும் மனஸ்தாபங்கள் தான் மிஞ்சும்.

திரைக்கு பின்னால் இருக்கிற வேலைகள், டிசைனர், ஆர்கிடெக்ட்,வக்கீல் போன்றவை செய்யலாம். க்ரியேட்டிவிட்டு துளியும் இல்லாத வேலை எதுவாக இருப்பினும் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

விருச்சிகம் :

இவர்களுக்கு பிறரை விட தன்னம்பிக்கை ஜாஸ்தி. எந்த வேலையாக இருந்தாலும் முழு மனதுடன் ஈடுபடுவதால் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றியே கிட்டும். இவர்கள் சைக்காலஜி துறை, சட்டம்,தொண்டு நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றலாம்.

தொண்டு நிறுவனத்தை பொறுத்தவரை பொதுநலத்துடன் சிந்திக்ககூடிய நபர்கள் மட்டுமே அங்கே நிலைக்க முடியும். அதனால் இந்த துறையில் நீங்கள் பேரும் புகழும் அடையலாம்.

தனுஷு :

தனக்கான இடம், தனக்கான சுதந்திரம் எதனாலும் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருப்பார்கள். ஒரு வேலை செய்யத் துவங்கும் முன்பாக இவர்களிடம் பயங்கரமான திட்டமிடல் இருக்கும்.

இவர்கள் விளையாட்டுத் துறை, விமானி, போலீஸ் அதிகாரி,துப்பறியும் வேலை ஆகியவற்றை மேற்கொண்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஒரேயிடத்தில் உங்களது க்ரியேட்டிவிட்டிக்கு வேலையில்லாத டெஸ்க் வொர்க் தவிர்த்திடுங்கள்.

மகரம் :

இவர்களுக்கு மிகவும் உயர்ந்த லட்சியம் இருக்கும். எப்போதும் அமைதியாக இருந்தே வேலைகளை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். போட்டி மனப்பான்மை இருந்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்திருப்பதால் தனக்கான போட்டியாளர் யார் என்று தீர்மானிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

பணம் தொடர்பான வேலைகள் மற்றும் நிதி ஆலோசனை வழங்குவதில் கொஞ்சம் நிதானத்தை கடைபிடிக்கலாம். இவற்றினால் உங்களுக்கு சிக்கல் தான் ஏற்படக்கூடும்.

கும்பம் :

எதையும் ஆராய்ந்து பிடிவாதமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.எல்லாரிடமும் நட்பு பாராட்டுவார்கள். இதனால் வெளியுலகத் தொடர்பு உங்களுக்கு அதிகம் இருக்கும்

ஆராச்சியாளர், ஆப்ஸ் டெவலப்பர் போன்ற வேலைகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்கள் நினைப்பதை விட வித்யாசமான மன ஓட்டம் கொண்டவர்களிடத்தில் சேர்ந்து பணியாற்றுவதை தவிர்த்திடுங்கள்.

மீனம் :

இவர்கள் அதிக சென்ஸ்டிட்டிவ் கொண்டவர்களாக இருப்பார்கள்.எப்போதும் தங்களது உள்ளுணர்வு சொல்வதையே அதிகம் நம்பக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதோடு தான் நம்பியது தான் சரி என்று நம்புவதால் பல நேரங்களில் இவர்களது வேலை சொதப்புவதும் உண்டு.

டிசைனர், பொழுது போக்கு அம்சம் நிறைந்த வேலை வாய்ப்புகள் கிடைத்தால் உங்களுக்கு நல்லது. அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலையை தவிர்ப்பது நல்லது.

Related posts

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

ஜலதோஷம், தலைவலிக்கு சிறந்த மருந்து!

sangika

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

nathan

இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி சரி பண்ணலாம்?

nathan

ஆபத்தை தரும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

பெண்கள் இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

healthy tips, குழந்தையின் மலச்சிக்கலுக்கு உடனடி பலன் தரும் வைத்தியம்.

nathan