25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
amil 2
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இவைகள் தான் மார்பக காம்புகளில் அரிப்பை உண்டாக்குகின்றன என்பது தெரியுமா?

பொதுவாக பெண்கள் தங்களது அந்தரங்க பகுதிகளில் சந்திக்கும் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள சங்கடப்படுவார்கள். அதில் ஒன்று தான் மார்பக காம்புகளில் ஏற்படும் அரிப்பு. பெண்கள் வளர வளர உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், மார்பகங்களின் அளவும் வளரும். மார்பகங்கள் பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு பெண்ணிற்கு மார்பகங்களில் எப்போதும் அரிப்பு ஏற்பட்டால், அப்பெண் பொது இடத்தில் எவ்வளவு தர்ம சடங்கடத்திற்கு உள்ளாவாள்.

எனவே மார்பக காம்புகளில் ஏற்படும் அரிப்பிற்கான காரணங்கள் என்னவென்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அது என்ன காரணங்களாக இருக்கும் என்பது குறித்து தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வறட்சியான காலநிலை

பொதுவாக காலநிலை வறட்சியாக இருக்கும் போது, அதாவது பனிக்காலத்தில் உதடுகள், சருமம் போன்றவை அதிக வறட்சிக்குள்ளாகி, சில சமயங்களில் வெடிப்புகள் கூட ஏற்படும். இத்தகைய நிலை உதடு மற்றும் சருமத்திற்கு மட்டுமின்றி, சில சமயங்களில் மார்பக காம்புகளிலும் ஏற்படலாம். எனவே இதனைத் தவிர்க்க, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். மார்பக காம்புகளில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

* மார்பகங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

* பொதுவாக குளிக்கும் போது சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்க சோப்பைப் பயன்படுத்துவோம். எனவே எப்போதும் 10 நிமிடத்திற்கு மேல் குளிக்காதீர்கள்.

* வீட்டினுள் வீசும் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்க ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துங்கள்.

எக்ஸிமா

உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் எக்ஸிமா இருந்தால் மற்றும் முலைக்காம்புகளில் அரிப்பு மற்றும் வறட்சி வெடிப்பால் ஏதேனும் நீர்மம் சுரந்தாலோ, உடனே ஸ்டெராய்டு மேற்பூச்சைப் பயன்படுத்துங்கள். ஆனால் அவ்விடத்தில் வெடிப்புகள் கடுமையாக இருந்து, அதிகளவு திரவம் சுரக்கப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுங்கள். வெடிப்புக்களில் திரவம் அதிகம் வழிவது என்பது தோலற்சியை விட மோசமானது.

புதிய சோப்பு அல்லது பாடி வாஷ்களைப் பயன்படுத்துவது

சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள் மற்றும் இதர உட்பொருட்கள் தோல் அழற்சியை உண்டாக்கும். ஆகவே நீங்கள் சோப்பு அல்லது பாடி வாஷை மாற்றியப் பின் உங்கள் மார்பக காம்புகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால், இதற்கு காரணம் நீங்கள் மாற்றிய புதிய சோப்பு தான். உடனே அந்த சோப்பைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இதனால் அரிப்பும் நீங்கும்.

புதிய பிராவை துவைக்காமல் பயன்படுத்துவது

நீங்கள் புதிதாக வாங்கிய பிரா பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று காணலாம். ஆனால் புதிய துணிகள் அனைத்தும் மொத்தமாக தொழிற்சாலைகளில் இருந்து கட்டி மூட்டையாக அழுக்கு நிறைந்த பொருட்கள் மற்றும் பகுதிகளில் வைக்கப்பட்டு, பின் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. எனவே எப்போதும் புதிய பிரா ஆகட்டும், ஜட்டி ஆகட்டும், அதைத் துவைக்காமல் பயன்படுத்தாதீர்கள். இதனால் தொற்றுகள் தான் ஏற்படக்கூடும்.

பிராவின் உட்பகுதி கடினமாக இருப்பது

மார்பக காம்புகளில் அரிப்பு ஏற்படுவதற்கு நீங்கள் அணியும் பிராவின் உட்பகுதி கடினமாக இருப்பதும் ஓர் காரணமாகும். ஏற்கனவே மார்பக காம்புகள் மிகவும் மென்மையானவை மற்றும் சென்டிவ்வானவை. இப்பகுதியில் மிகவும் கடினமாக இருக்கும் பிராவை அணிந்தால், அதனால் அரிப்புகள் தான் ஏற்படும் எனவே இதைத் தவிர்க்க உடனே உங்கள் பிராவை மாற்றுங்கள்.

கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பல மாற்றங்களை சந்திப்பார்கள். இந்த மாற்றங்களால் பல உடல்நல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். அதில் காலைச் சோர்வு, கால் வீக்கம் போன்றவற்றுடன், மார்பக காம்புகளில் ஏற்படும் அரிப்பும் ஒன்று. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாளடைவில் இது சரியாகிவிடும்.

தாய்ப்பால் கொடுப்பது

தாய்ப்பால் கொடுப்பது பார்ப்பதற்கு எளிதான ஒன்றாக காணப்படலாம். ஆனால் எப்போது குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மோசமான முறையில் குடிக்கிறதோ, அப்போது சென்சிவ்வான மார்பு பகுதிளில் கடுமையான வலியுடன் சில சமயங்களில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே உங்கள் மார்பக காம்புகள், காயங்கள் மற்றும் அரிப்புகளுடன் இருந்தால், நிப்புள் பட்டர் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

பூஞ்சை தொற்று

த்ரஷ் என்பது ஒரு வகையான பூஞ்சை தொற்று. இது ஈரமாக இருக்கும் பகுதியைத் தாக்கும். குறிப்பாக நாக்குகளில் இந்த பூஞ்சை தாக்குதல் அதிகம் இருக்கும். இதற்கு மோசமான சுகாதாரம் ஓர் காரணமாகும். எனவே உங்கள் மார்பக காம்புகளைச் சுற்றி வெள்ளை படலம் மற்றும் தொட்டால் கடுமையான வலியை உணர்வதோடு, அரிப்பையும் சந்தித்தால், பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் சுயமாக மருந்துகளை எதுவும் பயன்படுத்தாமல், உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

இறுதி மாதவிடாய்

ஒரு பெண் தனது இறுதி மாதவிடாய் காலத்தை நெருங்கும் போது, சருமம் மிகவும் வறட்சி அடைந்து, அரிப்புக்களை உண்டாக்கும். எனவே உங்கள் உடல் மிகவும் சூடாக இருந்து, மார்பக காம்புகளில் கடுமையான அரிப்புக்களை சந்தித்தால், நீங்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி நிற்கப் போகிறது என்று அர்த்தம்.

மார்பக கட்டிகள்

மார்பக காம்புகள் அரிப்புகளுடனும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டிகள் இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால், மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இப்படியே சாதாரணமாக விட்டுவிடாமல், ஒரு பெண் நோய் மருத்துவரை சந்தித்து, அவர்களிடம் இதுக்குறித்து கூறி, மார்பக புற்றுநோய் தீவிரமாவதைத் தடுத்திடுங்கள்.

Related posts

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

வாழ்க்கையை இன்பமாக்கி கொள்ள உறவுகளின் துணை தேவை

nathan

நரம்புகள் பலம் பெற

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

nathan

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

nathan

உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

nathan

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்……

nathan

உங்கள் கால்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan