தேவையான பொருட்கள் :
கேரட் பெரியது – 1
தக்காளி – 1 (சிறியது)
சின்ன வெங்காயம் – 5
இஞ்சி – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 2
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
• தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சிய பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
• கேரட்டின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி வைக்கவும்.
• அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைத்து வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும்.
• வெங்காயத்தின் நிறம் மாறியதும் தக்காளி, உப்பு, சேர்த்து மைய வதக்கவும்.
• சீவிய கேரட், புளிக்கரைசலை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.
• ஆறியவுடன் இதை மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
• அடுப்பில் கடாயை வைத்துத் தாளிக்க கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கி, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும். டிபன் மற்றும் சாதத்தோடு தொட்டு சாப்பிடலாம்.