26 carrot chutney
ஆரோக்கிய உணவு

சுவையான கேரட் சட்னி

கேரட் சாப்பிட்டு வந்தால், கண்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். பலர் கேரட்டை அப்படியே சாப்பிடுவார்கள். வேறு சிலரோ அதனை ஜூஸ் செய்து குடிப்பார்கள். ஆனால் இந்த கேரட்டை கொண்டு சட்னி செய்தும் சாப்பிடலாம் என்று தெரியுமா? ஆம், கேரட் சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு அருமையாக இருக்கும்.

மேலும் காலை வேளையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியானதும் கூட. சரி, இப்போது கேரட் சட்னியின் செய்முறையைப் பார்ப்போம்.

Carrot Chutney Recipe
தேவையான பொருட்கள்:

கேரட் – 4 (துருவியது)
சின்ன வெங்காயம் – 8
வரமிளகாய் – 2
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, வரமிளகாய், புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களானது குளிர்ந்ததும், அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கேரட் சட்னி ரெடி!!!

Related posts

தெரிஞ்சிக்கங்க…நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!!

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை நீரை குடிக்கலாமா? தெரிந்துகொள்வோமா?

nathan

ghee benefits in tamil – நெய் உண்ணுவதின் நன்மைகள்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

nathan

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

nathan

காளான் மசாலா

nathan