25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
c5796db5 ffb0 4301 b2c3 0e6e8dc8fb34 S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்

நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
• புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்கத் தவறாதீர்கள்.

• குழந்தை விழித்திருந்த போது நகத்தை வெட்ட கூடாது. குழந்தை தூங்கும் போது நகத்தை வெட்டுவது எளிது என்பதை முதல் குழந்தை பெற்ற தாய்மார்கள் உணர்வதில்லை. நீங்கள் ஒரு புதிய அன்னையாக இருந்தால், அங்கே இங்கே என்று கைகளை விசிறிக் கொண்டிருக்கும் செல்லப்பாப்பாவின் விரல் நகங்களை பிடிப்பது எவ்வளவு வேலை தரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

• குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் எதையாவது தவறாக செய்து விட்டு, நான் ஒரு மோசமான தாய் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.

• குழந்தை பிறந்த வேளையில் அவரும் ஒரு பெற்றோர் – தந்தை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், ஒரு புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருந்த நான், அவரும் ஒரு புதிய அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறந்து விட்டேன்.

பெரும்பாலான புதிய தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எனினும், இது எளிதில் சரி செய்யக் கூடிய தவறாக உள்ளதால் கவலை வேண்டாம். எனவே, எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம்.

• புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும்.
c5796db5 ffb0 4301 b2c3 0e6e8dc8fb34 S secvpf

Related posts

வீட்டில் பீட்ரூட்டை வளர்க்கும் முறை!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆயுர்வேத இரகசியம்! தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்!

nathan

குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இத சாப்பிட கொடுங்க…

nathan

இதை படியுங்கள் மக்காசோளம் சாப்பிட்டவுடன் இதை செய்தால் உயிருக்கே ஆபத்து.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ்!பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் தரும் அதிமதுரம்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் உண்டாகும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு இதுவே அருமருந்து!

nathan

ஒரு ஆணின் உடலில் ரு பெண் செக்ஸ் ஹார்மோன் இருந்தால்..ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம்

nathan

இந்த விஷயங்களை எல்லாம் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது தெரியுமா?

nathan