27.4 C
Chennai
Wednesday, Nov 20, 2024
1swim
ஆரோக்கியம் குறிப்புகள்

தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்கள் நீச்சல் அடிக்கலாமா? கூடாதா?

நீந்துதல் என்பது நல்லதோர் உடற் பயிற்சியாகும். ஆனால், தங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பருவத்தில் நீந்தலாமா? என பல தாய்மார்கள் ஆச்சரியமாக கேள்வியை எழுப்புகின்றனர். சிலரோ, ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நீந்தும் பழக்கத்தையே நிறுத்தியும் விடுகின்றனர்.

அதன் பிறகு, உடற்பயிற்சி செய்யாமல் போனதால், கொழுப்பு அதிகரித்து விட்டது என கவலை கொள்வோரும் இங்கே நிறைய பேர். தாய்ப்பால் தரும்பொழுது நீந்துவது சரிதானா? என்றதொரு சந்தேகம் உங்களுக்குள் ஏற்படுமாயின்…கீழ்க்காணும் பத்தியினை படித்து தான் தெரிந்துகொள்ளுங்களேன்.

முதலில் சிலவற்றினை உங்கள் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள். எதாவது உங்கள் குழந்தைக்கு உகந்ததாக இல்லை என்ற பயமா? இந்த தாய்ப்பால் நிலையில், குறிப்பிட்ட சில விசயங்களை செய்வது நல்லது அல்ல என நீங்கள் நினைக்கிறீர்களா?

#1

நீச்சல் குளத்து நீரில் இருக்கும் க்ளோரின், தாயின் முலைக்காம்புகளை வரண்டுவிட செய்கிறது. மேலும் இது உங்கள் சருமத்தில் இருக்கும் நீரையும் வெளியேற்றிவிடுகிறது.

இதனால் நீச்சலடித்த பின் மார்பகங்களை நன்றாக சுத்தமான நீரினால் கழுவிய பின் குழந்தைக்கு பால் கொடுப்பதால் இன்ஃபெக்ஷன் உண்டாவதை தடுக்கலாம்..

#2

முதலாவதாக, சில பெண்கள் தங்களுடைய எடை குறைவதனால் தாய்ப்பால் உற்பத்தி பாதிக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால், ஆரோக்கியமான உணவை உண்ணுவதும், நலமுடன் ஒரு தாய் இருப்பதுமே தாய்ப்பாலின் உற்பத்திக்கு காரணமாகும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனால், முதலில் டாக்டரை சென்று பார்த்து, இப்பொழுது நீந்துவது சரி தானா? என்பதனை உறுதி செய்துகொள்வது நன்மை பயக்கும்.

#3

குளிர்ந்த நீரில் உங்களுடைய நேரத்தை செலவிடுவது உங்கள் உடம்பில் இருக்கும் ஆக்ஸிடாஸின் அளவினை குறைக்கிறது. நீந்துதல் என்பது உங்களுடைய மார்பகத்திலிருந்து வெளியாகும் பாலை நேராக ஒருபோதும் பாதிப்பது கிடையாது.

குளிர்ந்த நீரின் நீண்ட வெளிப்பாட்டினால் மன அழுத்தம் அதிகமாக, அது பால் ஓட்டத்தை பாதிக்கிறது. ஒருவேளை நீங்கள் வெதுவெதுப்பான நீரில் நீந்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும்

#4

சிலரோ, நீந்துவதனால்…அது பாலின் ருசியை மாற்றுகிறது எனவும் நினைக்கின்றனர். அப்படி நினைப்பது தவறாகும்.

ஆனால், லாக்டிக் அமிலம், ருசியை லேசாக மாற்றும் தான். ஆனால், நீச்சல் போன்ற ஏரளமான உடற்பயிற்சிகள், லாக்டிக் அமிலத்தை சுரக்க செய்யும் என்பது உண்மை தான். அதனால், நீச்சல் குளத்தினை பற்றிய வீண் கவலைகளை உங்கள் மனதில் ஒருபோதும் உருவாக்கிகொள்ளாதீர்கள்.

#5

இவை அனைத்தையும் படித்த பிறகும் நீச்சல் மீது உண்டான உங்களுடைய ஆர்வம் நீங்கவில்லையா? அப்படி என்றால், முதலில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தந்துவிட்டு..அதன் பிறகுதான் செல்லுங்களேன்.

அதேபோல், நீந்திவிட்டு வரும் நீங்கள், உங்களுடைய முலைக்காம்புகளை நன்றாக கழுவ வேண்டியது அவசியமாகும். அத்துடன், உங்கள் முலைக்காம்பானது வரண்டு இருக்கிறதா? என்பதனையும் சரிபார்த்து கொள்ளுங்கள்.

அதேபோல், நீச்சல் முடிந்து உங்கள் உடம்பினை சவரில் நினைக்க மறந்துவிடாதீர்கள். மேலும், முறையான டாக்டர் ஆலோசனை இல்லாமல், நீச்சல் பயிற்சிக்கு நீங்கள் செல்வதனையும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

Related posts

40 நாட்கள் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

nathan

இதோ அசத்தல் ஐடியா.! பயணத்தின் போது வாந்தி எடுப்பவரா நீங்கள்..?

nathan

வெந்நீரே… வெந்நீரே..

nathan

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan

பெண்களிடம் ஆண்கள் பேச தயங்கும் விஷயங்கள்! அதற்கான காரணம் …

nathan

வயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்! தெரிஞ்சிக்கங்க…

nathan

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

nathan

நகம் கடிப்பதால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

nathan