புதிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் சில விஷயங்களை செய்கிறார்கள். இது குழந்தையை அபாய நிலைக்கு கொண்டு சென்று விடும். எனவே இது போன்ற காரியங்களில் மறந்தும் கூட ஈடுபடாதீர்கள்.
உணவு அலர்ஜி
குழந்தைகளுக்கு சில உணவுகளை கொடுக்கும் போது உண்டாகும் மிக சிறிய அலர்ஜி கூட உங்கள் குழந்தைய அபாய நிலைக்கு எடுத்து செல்லும். சில வகையான உணவுகளை உண்ணும் போது குழந்தைக்கும் வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று கோளாறுகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அனுக வேண்டும். இது போன்ற சில விஷயங்களை உங்கள் மருத்துவர் சொல்ல தவறினால் கூட நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுத்தமான தலையணை
குழந்தைகளுக்கு உபயோகிக்கும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஏதேனும் தூசுக்கள் இருந்தால் அது குழந்தையின் தூக்கம் மற்றும் மூச்சுவிடுதை பாதிக்கும். எனவே அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
விரைவாக உணவு கொடுத்தல்
அதிகமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு விரைவாக சாதம் போன்ற கெட்டியான உணவுகளை கொடுக்க தொடங்கிவிடுகின்றனர். ஆனால் குழந்தைக்கு திடமான உணவுகளை செறிக்கும் அளவிற்கு சக்தி இல்லை என்பதை உணர மறுக்கின்றனர். குழந்தைக்கு நான்கு முதல் ஆறு மாதத்திற்கு குறைவாக எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்க கூடாது. இது குழந்தையின் செறிமானத்தில் பிரச்சனையை உண்டு செய்யும்.
மேலும் உடல் பருமனை கூட்டும்.
வேர்கடலை கலந்த உணவுகள்
ஆய்வுகளின் படி வேர்கடலை கலந்த உணவுகளை நான்கு மாதம் முதல் ஆறு மாதத்தில் கொடுக்கலாம். வேர்கடலை கலந்த உணவுகளான பீனட் பட்டர் ஆகியவற்றை ஒரு வயதிற்குள் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் முட்டை போன்ற பொருட்களால் உண்டாகும் அலர்சியை 80% வரை குறைக்க முடிகிறது.
கைப்பைகளை கவனமாக வைக்கவும்
உங்கள் குழந்தைகள் உங்கள் கைப்பையின் மீது அதிக ஆர்வம் வைத்து இருப்பார்கள். அதை திருந்து பார்க்க விரும்புவார்கள், உங்கள் கைப்பையில் இருக்கும், ஏதேனும் கூர்மையான பொருள், அல்லது அழகு சாதன பொருட்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் உங்கள் கைப்பைகளை வையுங்கள்.