28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
518593410
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபத்தில் உதவும் தற்காப்பு முறைகள்

பெண்கள் எந்த நேரத்திலும் ஆபத்துகளை சந்திக்கும் தைரியத்தோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்காப்பு கலைகள் பெண்களின் பாதுகாப்புக்கு உதவும். அவற்றுள் சில முக்கியமான மற்றும் எளிதான முறைகளை தெரிந்து வைத்து கொண்டால் தேவைப்படும் நேரங்களில் கையாளலாம்.

ஹேமர் ஸ்டிரைக் ( சுத்தியல் முறை தாக்குதல்)

ஆபத்து வரும் நேரத்தில் பலரும் கைகளில் வளர்த்திருக்கும் நகங்களினால் கீறியே எதிர்ப்பை வெளிகாட்டுவது உண்டு. இதனால் கை நகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு பதிலாக சாவியை கொண்டே தாக்க முடியும். வாகனத்தில் உள்ள சாவியை கையில் இறுக்கி பிடித்து கொண்டு தாக்கலாம். நீளமான கீ செயின் இருந்தால் அதை எதிராளியின் முகத்திற்கு நேராக எறிந்து எதிர்பாராத தாக்குதலால் அவரை செயலிழக்க செய்யலாம். இது சிறந்த தாக்குதல் முறையாக வெளிநாடுகளில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

க்ரோஇன் கிக் (இடுப்பில் அடித்தல்)

எதிராளி உங்களை நோக்கி நெருங்கும் போது உடனடியாக ஒரு காலை இடுப்பி வரை தூக்க வேண்டும். எதிராளி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் இடுப்பு பகுதியை வலுவாக தாக்க வேண்டும். இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழும் நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கலாம். இந்த முறையில் தாக்கும் போது நீங்கள் நிலை தடுமாறி கீழே விழாமல் சுதாரித்து கொள்ள வேண்டும்.Tamil News Women Self Defense SECVPF

ஹீல் பாம் ஸ்டிரைக்(உள்ளங்கையால் தாக்குதல்)

இது மிகவும் எளிமையாகவும், துணிச்சலோடும் எதிராளியை தாக்கும் முறையாகும். நமக்கு முன்பாக நிற்கும் எதிராளியை உள்ளங்கையை கொண்டு அவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் தாக்க வேண்டும். இதன் மூலம் எதிராளியை நிலை குலைய செய்து தப்பிக்கலாம்.

எல்போ ஸ்டிரைக் (முழங்கையால் தாக்குதல்)

முழங்கையை மடக்கி கொண்டு எதிராளியின் முகத்தில் தாக்க வேண்டும். இத்தகைய எதிர்பாராத தாக்குதலால் எதிராளி கீழே விழ நேரிடும். எதிராளி எதிரே இருந்தால் மட்டுமல்ல.. நமக்கு பின்னால் இருந்தாலும் இந்த முறையின் மூலம் எளிதாக தாக்க முடியும்.

எதிர்பாராத வகையில் எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.

பியர் ஹக் அட்டாக்

நமது பின் பக்கத்தில் இருந்து எதிராளி கட்டிப்பிடித்தால் முதலில் பயத்தை விடுத்து துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கையை மடக்கி முழங்கையால் அவரது முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பலமாக தாக்க வேண்டும்.

கையை கீழே இறக்கி தாக்குதல்

எதிராளியின் கிடுக்கிபிடி வலுவாக இருந்தால் முதலில் நமது கையை கீழே இறக்கி எதிராளியின் முழங்காலில் தாக்க வேண்டும்.

ஹெட் லாக்கில் தப்பிப்பது

நமது தலை எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால் தலையை மெதுவாக அசைத்து அவரை தடுமாற செய்ய வேண்டும். பின்பு கையால் அவரது இடுப்பு பகுதியில் தாக்க வேண்டும்.

Courtesy: MalaiMalar

Related posts

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

குழந்தைகளுக்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது எப்படி?

nathan

கறை படிந்த பற்கள் இருந்தால் இத மட்டும் செய்யுங்க போதும்!

nathan

இத படிங்க உடல் பருமன் உண்டாக காரணங்கள் என்ன ??

nathan

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு

nathan

சிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள

nathan

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்… சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!

nathan