29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
kidney 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரைப்பை கோளாறுகள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம்!

முன்பு போல இந்த அறிகுறிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தால் தான், இந்த நோய் வரும் என கூறுவதற்கு இல்லாமல். ஏதோ ஒரு காரணத்தினால் அனைவருக்கும் சில நோய்கள் ஏற்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு எங்கேயோ கேள்விப்பட்டவை என இருந்த நோய்கள் எல்லாம். இப்போது, நம் கண்முன் வாழும் அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு உள்ளதை நாம் காணாமல் இல்லை. கால நிலை மாற்றத்தினாலோ, நமது வாழ்வியல் முறை மாற்றத்தினாலோ இவை ஏற்படுகின்றன. அப்படி தான் இப்போது இரைப்பை கோளாறுகள் காரணமாக சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைகள் தலை தூக்கியிருக்கின்றன.

 

நமது நாட்டின் முக்கிய நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில் இரைப்பை கோளாறு ஏற்படுகின்ற நான்கில் ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது என்பதே ஆகும்.

 

இதில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது, ஒன்று தான் உங்களை நீங்களே நோய் தொற்று ஏற்படாமல் தற்காப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். சரி வாருங்கள் இனி, இரைப்பை கோளாறுகள் எப்படி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகின்றன, அதிலிருந்து தப்பிப்பது எப்படி என தெரிந்துக் கொள்ளலாம்….

சுற்றுபுற சுத்தம்

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக மேஜைகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகள் முதலியனவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளோரின் அல்லது ப்ளீசிங் பவுடர் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம்.

பாத்ரூம்

பாத்ரூம் சென்று வந்த உடன் உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஒருவேளை நீங்கள் பொது கழிவறைகளை பயன்படுத்துபவராக இருந்தால் கட்டாயம் உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

கை கழுவுதல்

சமைக்கும் போதும் சாப்பிடும் முன்னரும் கைக் கழுவுவது அவசியம். இதன் மூலம் தான் அதிகப்படியான நோய் கிருமிகள் உடலுக்குள் செல்கின்றன.

சாலையோர உணவுகள்

சுகாதாரமற்ற சாலையோரக் கடைகளில் உணவு சாப்பிடுவதை தவிருங்கள். தூய்மையான தண்ணீரினால் சமைக்கப்பட்ட உணவை மட்டும் உட்கொள்ளுங்கள்

பழங்கள்

வெகு நேரம் முன்னரே அறுத்து வைக்கப்பட்ட பழங்களை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். அறுத்து வைக்கப்பட்டிருக்கும் பழங்களில் மிக வேகமாக கிருமிகள் தொற்றிக்கொள்ளும்.

மழைநீர்

மழையிலோ அல்லது வேறெங்காவது தேங்கி இருக்கும் தண்ணீரிலோ நீங்கள் நனைந்துவிட்டால், தவறாமல் வீடு திரும்பியதும் நன்கு குளியுங்கள். முக்கியமாக வேறு யாரையும் தொட்டுவிட வேண்டாம். கிருமிகள் அவர்களுக்கும் தொற்றிவிட வாய்ப்புகள் உண்டு.

ஷூ (Shoe)

உங்களது செருப்பு மற்றும் ஷூவை வீட்டின் வெளியிலேயே கழற்றிவிடுங்கள். நாம் சாலையில் நடந்து செல்லும் போது எத்தனையோ கிருமிகள் அதில் தொற்றுகின்றன. அதை வீட்டினுள் உபயோகப்படுத்தும் போது நிறைய கிருமிகள் வீட்டில் உள்ளவர்களை தொற்றிட வாய்ப்புகள் இருக்கின்றன

மன அழுத்தம்

உங்களது மன அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கம்ப்யூட்டர்

நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் உபயோகப்படுத்துபவராக இருந்தால். கீபோர்டு மற்றும் மௌஸ்களில் தூசு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து கூட கிருமிகள் அதிகம் பரவுகின்றன.

Related posts

இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

nathan

‘பெரும்பாடு’ போக்கும் வில்வம்! மருத்துவம்!!

nathan

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்

nathan

பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பிறப்புறுப்பில் பிரச்சனை என்று அர்த்தம்…கவனமாக இருங்கள்!

nathan

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்

nathan

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா

nathan

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

nathan

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

nathan