25 sundaikai vathal kuzhambu
ஆரோக்கிய உணவு

சூப்பரான சுண்டைக்காய் வத்தக்குழம்பு

அனைவருக்குமே வத்தக்குழம்பு என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் சுண்டைக்காய் வத்தக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, சுண்டைக்காய் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். சுண்டைக்காய் வத்தக்குழம்பை சூடாக இருக்கும் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

Sundakkai Vathal Kuzhambu
தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் – 1/4 கப்
புளி – 1/2 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 15 (தோலுரித்தது)
பூண்டு – 10 பற்கள் (தோலுரித்தது)
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 3/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் சுண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுண்டைக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!

Related posts

தயிர்

nathan

small onion benefits in tamil -சின்ன வெங்காயம்

nathan

சியா விதை சாப்பிடும் முறை

nathan

பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

nathan

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

நீங்கள் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள் இதை படிங்க…

nathan

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

கொலஸ்ட்ராலை முற்றிலும் இல்லாதொழிக்கும் நல்லெண்ணைய்…!

nathan