20 1432125198 3 curd
ஆரோக்கியம் குறிப்புகள்

அறுசுவை உணவில் தயிரும் வந்தாச்சு

அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப் பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாததாக தயிர் மாறிவிடும்.

தயிர், உடலுக்கு அருமருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும்.

பாலில் லாக்டோ என்ற வேதிப் பொருள் கலந்து இருக்கிறது. தயிரில் லாக்டொபஸில் என்ற வேதிப் பொருள் உள்ளது; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்ளச் சொல்லி டாக்டர்கள் சொல்ல கேட்டிருக்கலாம். பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும்; ஆனால், தயிர் அப்படியல்ல.

அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும். பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளை உண்ணும் போது தான் வயிற்றுக்கு அதிக கேடு ஏற்படும்; இதை தவிர்க்க தான், தயிர் உண்கிறோம். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டோர், தயிர், மோரில் சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்து.
20 1432125198 3 curd

Related posts

கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!

nathan

பெண்களே 40 வயதை கடந்துவிட்டீர்களா!

nathan

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

nathan

பற்களைத் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்!

nathan

இதை முயன்று பாருங்கள் பிரியாணி இலையை தீயிட்டு கொளுத்தி சுவாசித்தால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

nathan

இட்லி சாப்பிடும் முன்பு கண்டிப்பா இதைக் கவனியுங்க!கேன்சர் அபாயம்…

nathan

இஷ்டம் போல எடை ஏற்றலாமா?

nathan