24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
tamil 8
ஆரோக்கிய உணவு

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

வழக்கமாக நாம் உண்ணும் தானியங்களான அரிசி, கோதுமை, ரவை போன்றவற்றை விட சத்து நிறைந்த சிறப்பான உணவு குதிரை வாலி.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது.

உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் அதிகம்.

ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்க தேவையான ஊட்ட சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் அனைத்தும் குதிரை வாலியில் காணப்படுகிறது.

குதிரை வாலியை சமைத்து சாப்பிட இதில் அடங்கி இருக்கும் நார் சத்துக்கள் அனைத்தும் நேரடியாக கிடைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது மற்றும் மலச்சிக்கலால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலை கட்டுக்கோப்பாகவும் சீராகவும் செயல் பட செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.

ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை குறைப்பதிலும் மற்றும் சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.

தசைகள், எலும்புகளுக்கு வலிமை கொடுத்து செயல்படுவதோடு ஆண்டி ஆக்ஸிடண்ட்டாகவும் செயல்படுகிறது.

இதை ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து, அதன் பிறகு சமைக்க வேண்டும். தினமும் இதை எடுத்துகொள்ள வேண்டும் என்று இல்லை.

வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை எடுத்துகொள்ளலாம். க்ளூட்டன் பிரச்சனை இருப்பவர்களும் குதிரைவாலி அரிசியை எடுத்துகொள்ளலாம்.

Related posts

இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க..

nathan

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

nathan

சுவையான பேசன் ஆம்லெட்

nathan

இந்த ஒரு பொருளுடன் அத்திப்பழம் சாப்பிட்டால் குண்டாகிடுவீங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

ஓட்ஸ் டயட் ரொட்டி

nathan

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

கம்பு உணவு நோய்களுக்கு நிவாரணி! உணவே மருந்து !!

nathan