சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினமும் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும், அதிக ரத்தப் போக்கு கட்டுப்படும். மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800மி.லி.,நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்திவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பச்சை பச்சையாக பேதியாகும்.
இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு, அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நிற்கும். மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊறவைத்து, அந்த குடிநீரை வாய் கொப்பளிக்கலாம் அல்லது கஷாயம் வைத்தும் பயன்படுத்தலாம்.
3060 மி.லி., வரை அதையே உள்ளுக்கும் அருந்திவரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்தவாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின் போது அதிக ரத்தம் வெளியாதல், மேகநோய், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் தீரவும் கொடுக்கலாம். தக்க மருத்துவரின் ஆலோசனையை கேட்டு, பின்பற்றுவது நல்லது.