32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
benefitsofbanana
ஆரோக்கிய உணவு

வாழையடி வாழையாக நீங்கள் வாழ உதவும் வாழைப்பழம்! தெரிஞ்சிக்கங்க…

வாழைப்பழம்! சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம். மற்ற பழங்கள் போல இது இந்த காலத்தில் தான் கிடைக்கும் என்றெல்லாம் இல்லாமல், வருடம் முழுக்க கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம். கிட்டத்தட்ட 3௦௦-க்கும் மேற்ப்பட்ட வாழைப்பழ வகைகள் உலகம் முழுதும் விளைகின்றன. விலை மிக குறைந்தது, ருசி மிக்க பழம் என வாழைப்பழத்திற்கு நிறைய புகழ் சேர்க்கும் பயன்கள் இருக்கின்றன.

வாழை இலையும்… அதன் மகத்துவமும்…

வாழைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளது. நிறைய மக்கள் காலைக்கடனை கழிக்க உதவுவதே வாழைப்பழம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வாழையை விதைத்தால் அவர்கள் குடும்பம் காலம் கடந்து வாழும் என்றும், வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் நமது கிராமங்களில் வாழையை குறித்து நிறைய பழமொழிகள் கூறுவது உண்டு.

சந்தான விருத்தி தரும் செவ்வாழை!

நிறைய நற்பயன் கொண்ட வாழைப்பழத்தில். உங்களுக்கு தெரியாத நிறைய சுவாரஸ்ய ஆரோக்கிய தகவல்களும் இருக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்…

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்துகள் நிறைந்த வாழைப்பழம் தான், உலக சந்தையிலே அதிகம் விற்கப்படும் பழவகையாக கூறப்படுகிறது. இது மிகவும் விலை குறைவாக இருப்பதாலும், சுவையாகவும் உடல்நலத்திற்கு அதிக பயன்கள் தருவதாலும், உலக மக்கள் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

சக்தி

வெறும் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், ஒருவர் 9௦ நிமிடங்கள் இடைவிடாது உழைக்கத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது. இப்போது தெரிகிறது குரங்குகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் தாவிக்கொண்டும் இருப்பதற்கு காரணம்.

போதையில் தெளிய

மூக்குமுட்ட குடித்து, தலைக்கு மேல் போதை ஏறிவிட்டால், கவலைப்படவே தேவையில்லை, வாழைப்பழம் சாப்பிட்டால் ஏறிய போதை எல்லாம் இறங்கிவிடும்.

ஓவர்டோஸ் மரணம்

உங்களுக்கு தெரியுமா தொடர்ந்து 480 சாப்பிட்டால், பொட்டாசியச்சத்து ஓவர்டோஸ் ஆகி இறந்துவிடுவார்கள்.

பதட்டம் குறையும்

வாழைப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. இதனால் தான் உலகில் உள்ள நிறைய மக்கள் வாழைப்பழம் சாப்பிட விரும்புகின்றனர்.

பெண்களின் விருப்பம்

ஒரு ஆய்வில் வாழைப்பழம் விரும்பி உண்ணும் பெண்களுக்கு, ஆண்களை மிகவும் பிடிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர்

வாழைப்பழத்தில் 75% நீரின் பங்குள்ளது. இது நமது உடலில் நீரின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது

வாழைப்பழம் சாப்பிடுவதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயங்கள் குறைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றும் இது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. அதனால் தான் என்னவோ நம்ம ஊர் ஆண்கள் புகைத்துவிட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிடுகின்றனரோ?!

வகைகள்

வாழைப்பழத்தில் மொத்தம் 300 வகைகள் உள்ளன. இது உலகிலுள்ள 100 நாடுகளில் விளைகிறது.

உயர்ந்த மரம்

மூலிகை சத்துகள் நிறைந்த மரங்களில் உயர்ந்து வளரும் மரமாக வாழைமரம் கருதப்படுகிறது. இது பொதுவாக 20 அடி வளர்வதாக கூறப்படுகிறது.

Related posts

பழம் பொரி செய்ய…!

nathan

முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!

nathan

கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்!

nathan

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

nathan

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்?

nathan

தேனில் ஊறவைத்து வெங்காயத்தை சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா..?

nathan

யாரும் அறிந்திடாத சப்ஜா விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகளை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம்.

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிச்சடி

nathan