28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
raw cashew nuts
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பாயாசம், கேசரி, பொங்கல் போன்றவற்றிற்கு சுவைக்காக சேர்க்கப்படும் முந்திரியில் நிறைந்துள்ள நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம், முந்திரியை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

 

முந்திரியை ஸ்நாக்ஸ் நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவில் முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.

 

சரி, இப்போது முந்திரியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக, உப்பு சேர்த்து வறுத்து விற்கப்படும் முந்திரியை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளுக்கு அப்படியே எதிர் விளைவை ஏற்படுத்தும்.

 

ஆரோக்கியமான இதயம்

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பலர் கொழுப்புக்கள் நிறைந்துள்ள உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. உடலுக்கு கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நல்ல கொழுப்புக்கள் முந்திரியில் நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

நரம்புகளின் ஆரோக்கியம்

மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருந்தால், கால்சியம் இரத்த நாளங்களுக்குள் சென்று, இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இதனால் உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

வலிமையான எலும்புகள்

கால்சியத்தைப் போலவே, மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது

முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள்.

புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும்

முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முடிக்கு நல்லது

முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.

சிறுநீரகக் கற்கள்

தினமும் முந்திரியை உட்கொண்டு வந்தால், 25% சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

எடை குறைவு

முந்திரி கூட உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை அதிகரிப்பது குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செரிமானம்

அன்றாடம் முந்திரியை சிறிது உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வாய் பராமரிப்பு

முந்திரியில் மக்னீசியம் இருப்பதால், இவை எப்படி எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறதோ, இதேப் போல் பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

நிம்மதியான தூக்கம்

தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின், நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… இஞ்சியில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது…?

nathan

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!

nathan

மட்டன் தோரன்

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

தினமும் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

குளிர்காலத்தில் வேர்க்கடலையை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

nathan

பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துகோங்க!

nathan