25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
ஆரோக்கியம்உடல் பயிற்சி

தொடை சதையை குறைக்க வேண்டுமா

standing-leg-exerciseசிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள் ஆனால் கால் தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்நது 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

கால் பாத வலி, முட்டி வலி உள்ளவர்களுக்கும் இந்த பயிற்சி நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் வலது காலை நேராகவும் தரையில் ஊன்றியபடியும், இடது காலை சற்று பின்புறமாக (படம் 1ல் உள்ளபடி) 1 அடி தள்ளி வைக்கவும். 

பின்னர் மெதுவாக இடது காலை பின்புறமாக தூக்கி நேராக நீட்டவும். அப்போது இடது கை உடலோடு ஒட்டியபடி காலை தொட்டபடி (படம் 2ல் உள்ளபடி)இருக்க வேண்டும். வலது கையை முன்புறமாக நீட்டவும். இப்போது இடது காலும், வலது கையும் நேராக இருக்க வேண்டும்.

வளைக்க கூடாது. இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு காலுக்கும் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் ஒரு காலில் நின்று கொண்டு செய்வது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம். நன்கு பழகிய பின்னர் நேரடியாக இந்த பயிற்சியை செய்யலாம்.

Related posts

பெண்கள் இரவுநேரத்தில் நெடுநேரம் தூங்க வேண்டும் ஏன் தெரியுமா?

sangika

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

கர்ப்ப கால நீரிழிவு

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

எடையை குறைக்கும் உடற் பயிற்சிகள்

nathan

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

nathan

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

nathan

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

nathan