காலையில் எழுந்ததும் மிகவும் ஈஸியாக செய்யுமாறு என்ன ரெசிபி உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அதிலும் ஆரோக்கியமான ரெசிபி என்ன உள்ளது என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால் ராகி தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை காலை வேளையில் செய்து சாப்பிடலாம்.
அந்த அளவில் மிகவும் ஈஸியான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. சரி, இப்போது அந்த ராகி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Healthy Ragi Dosa Recipe
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் அல்லது மோர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ராகி தோசை ரெடி!!!