28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
self massage
ஆரோக்கியம் குறிப்புகள்

சுய மசாஜ் செய்துகொள்ளலாமா? என்னென்ன என்று பார்க்கலாம்.

மசாஜ் செய்வதற்கு அதற்குரிய மையங்களைத்தேடி செல்லவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகவே செய்துகொள்ளலாம்.

அதன் மூலம் வலி, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை நீக்கலாம்.

அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

நரம்புகளை வலுப்படுத்தும். தசை இறுக்கத்தை குறைக்கும். தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் ரத்த வெள்ளைஅணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

சுய மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்

கண் மசாஜ்

லேப்டாப், கணினியில் அமர்ந்தபடி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகும். காலப்போக்கில் கண் பார்வை பலவீனமடையும். இதனால் கண்களுக்கு மசாஜ் செய்வது நல்லது.

உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு வெப்பம் உண்டானதும் கண்களில் ஒற்றியபடி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் கண்களில் கதகதப்பை உணரலாம்.

மார்பு மசாஜ்

இரு கைகளையும் மார்புக்கு அருகே எதிரெதிரே வைத்தபடி தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். மார்பிலும் மென்மையாக மசாஜ் செய்யலாம். அப்படி மசாஜ் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும். மன அமைதியை உணரலாம்.

வயிறு மசாஜ்

சாப்பிட்டு முடித்த பிறகு கைவிரல்களை வயிற்றில் மேல் பகுதியில் வைத்தபடி கடிகார சுழற்சியை போல வட்ட வடிவில் வயிற்று பகுதியை வருடி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்யும்போது சாப்பிட்ட உணவு அதே திசையில் சுழன்று குடலுக்கு இதமளிக்கும். அதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

கை மசாஜ்

காலை கடன்களை முடித்த பிறகு கிரீம் அல்லது லோஷன் தடவி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்பு விரல்களை கொண்டு உள்ளங்கையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவமான இயக்கத்தில் மசாஜை தொடர வேண்டும். கட்டை விரலை மட்டுமே பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். இப்படி மசாஜ் செய்வது சரும அமைப்பை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்தும்.

கழுத்து மசாஜ்

நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்துக்கு பின் பகுதியில் கைவிரல்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். கழுத்தையொட்டிய பகுதியில் உள்ளங்கைகளை அழுத்தி மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலையை இடது புறமாக சாய்த்து கழுத்து தோள்பட்டை வரை தேய்க்க வேண்டும். பின்பு மறு பக்கத்திலும் தலையை சாய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் கழுத்துவலி எட்டிப்பார்க்காது.

Related posts

உங்களுக்கு தெரியுமா நல்ல தூக்கம் நல்ல அறிவைக் கொடுக்கும்.

nathan

மலட்டுத்தன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் வாழைப்பூ

nathan

டயட் மேனியாடயட்கள் எடைக்குறைப்பை மையமாகக் கொண்டே உள்ளன

nathan

குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா-தெரிந்துக்கொள்ளுங்கள்.

nathan

இத பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்!

nathan

இந்த 6 ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.

nathan

நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவது ஏன்? தெரிந்துகொள்வோமா?

nathan