நம் வீட்டில் அம்மா தினமும் சாப்பிட பேரிச்சம் பழம் கொடுப்பார்கள். சிலர் பேரிச்சம் பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏன் என்று பலருக்கு தெரியாது. இருப்பினும் அதனை சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இந்த பேரிச்சம் பழத்தை அப்படியே அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.இங்கு பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. ஆகவே இதனை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
எடையை அதிகரிக்கும்
உடல் எடையை அதிகரிக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை உட்கொள்வது நல்லது. அதிலும் இதனை அதிக அளவில் சாப்பிட வேண்டும். மேலும் இதில் சோடியம், கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
செரிமானத்தை சீராக்கும்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
இதய ஆரோக்கியம்
செரிமானம் சீராக நடைபெறுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்களின் சேர்க்கை குறைந்து, இதன் மூலம் இதயத்திற்கு எவ்வித அழுத்தமும் ஏற்படாமல், இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இரத்த சோகை
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்த சோகை. இந்த இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் அதிகமாகவே உள்ளது. மேலும் இரும்புச்சத்தானது சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி புரியும்.
பொட்டாசியம் நிறைந்தது
100 கிராம் பேரிச்சம் பழத்தில் 656 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் படி, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 3,510 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆகவே பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பொட்டாசியத்தைப் பெறலாம்.
நரம்புகளின் இயக்கம்
பேரிச்சம் பழத்தின் வேறு சில சத்துக்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. வைட்டமின் பி6 புரோட்டீன்களை உடைத்து, நரம்புகளிளை சீராப இயங்க