nayanthara
அழகு குறிப்புகள்

வெளிவந்த நயன்தாரா, விக்னேஷ் திருமண தகவல்! திருமணத்திற்கு பின்பு இப்படியொரு அதர்ச்சி முடிவா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலக உள்ளதாக ஒரு தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின், நயன்தாரா திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் யூகங்கள் எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் நயன்தாரா வரும் டிசம்பர் மாதத்திலோ, அல்லது 2022 ஆம் ஆண்டில் தொடக்கத்திலோ திருமண வாழ்க்கையில் இணைவார் என கூறப்படுகிறது. தற்போது இவர் இயக்குனர் அட்லீயின் பான் இந்தியா படமாக உருவாகி வரும், படத்தில் படப்பிடிப்பிற்காக பூனேவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திவிட்டு, மற்ற வேலைகளை முன்னெடுக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தாலும் இதுகுறித்து, நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது நயன்தாரா, சுமார் 6 வருடத்திற்கு பின்னர்… மீண்டும் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சமந்தா நடித்து வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினிகாந்த் , மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகிய நட்சத்திர பட்டாளங்களுடன் இணைத்து நயன்தாரா அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். அதே போல் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர் என்ற படத்திலும், பிருத்விராஜ் சுகுமாரனுடன் ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இதை செய்தால் போதும்..! முகத்தில் எண்ணெய் வழிகிறதா.?

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

இதை நீங்களே பாருங்க.! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan

பெப்பர் சிக்கன்

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

தலைமுடி அரிப்பை போக்க வீட்டு வைத்தியம் செய்வோம்…

sangika

‘துணிவு’ படத்தின் கேங்ஸ்டா பாடல் -சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்

nathan