28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
woman hair b
தலைமுடி சிகிச்சை

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

தினமும் தலைமுடியை அலசுவதால் பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. சருமத்தைப்போலவே தலை முடியும் மென்மையான உணர் திறன் கொண்டது. அதனை அளவுக்கு அதிகமாக அலசினால் அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.

மேலும், சுற்றுச்சூழல் மாசு, தூசு போன்றவை கூந்தலை நேரடியாக பாதிக்கும். உலர்தன்மை கொண்டதாகவும் மாற்றிவிடும். தினமும் தலைமுடியை அலசுவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதி, பெண்கள் பலரும் தலைமுடியை அலசும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

அத்துடன் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலை சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக அமைந்திருப்பதாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

தினமும் கூந்தலை அலசுவது சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என்று கருதலாம். ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல. கூந்தலுக்கு கெடுதலே நேரும். தலைமுடியை அடிக்கடி அலசுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும். முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.

அதிலும், குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச தேவையில்லை. அவ்வாறு செய்வது தலைமுடி வறண்டு, வெளிர்தன்மை அடைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமின்றி, தலைமுடியில் சிக்கலும் ஏற்படக்கூடும். அதனை அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். தலை முடியை சீப்பு கொண்டு சீவும்போது முடி உதிர்வு பிரச்சினையும் உண்டாகும். தலை முடி உதிர்வு, அரிப்பு பிரச்சினையை தடுக்கும்.

ஆனால் இதை அடிக்கடி செய்துவந்தால் உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாத நிலை ஏற்படும். தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது பொடுகு பிரச்சினைக்கு நிவாரணம் தரும். அதற்காக தலைமுடியை அளவுக்கு அதிகமாக ஷாம்பு கொண்டு கழுவக்கூடாது. அடிக்கடி அலசுவதால் பொடுகு பலவீனமடைந்தாலும், தலைமுடி மெல்லியதாக மாறக்கூடும்.

முடி உடைந்து போகும் வாய்ப்பும் அதிகம். தலைமுடியை சீவும்போது சீப்பில் முடிகள் படிந்தால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்வதை உணரலாம். ஈரமான தலைமுடியில் சீப்பை கொண்டு வாரக்கூடாது.

ஏனெனில் கூந்தல் முடி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எந்த அளவுக்கு அதிகமாக தலைமுடியை கழுவுகிறீர்களோ, அந்தளவுக்கு முடி உடைந்து சேதமடையும்.

Related posts

வழுக்கை தலையில் முடிவளர சித்தவைத்திய முறை

nathan

முடி அடர்த்தியாக வளர…

nathan

உங்கள் தலை முடி பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் கொய்யா இலை!

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் – எளிய நிவாரணம்

nathan

கூந்தல் உடைவதைத் தடுக்கும் கற்றாழை தேங்காய் எண்ணெய்!

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan

உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காய்கறிகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan