28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
BXHQRAPN
ஆரோக்கிய உணவு

நின்னுக்கிட்டே சாப்பிட்டா என்னென்ன ஆபத்து! மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

உணவு தான் உடல் ஆரோக்கியத்தின் முதல் படி அதில் உணவை எப்படி எடுத்துகொள்கிறோம் என்பதும் முக்கியமானது.

நின்றுகொண்டும் படுத்துகொண்டும் சாப்பிடுவதால் உடல் மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

​செரிமானத்தை பாதிக்கலாம்

நின்றுகொண்டே சாப்பிடுவது முதலில் ஜீரண மண்டலத்தை பாதிக்க செய்யும். ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்துகொள்ளும் போது வயிற்றில் இருக்கும் உணவு மெதுவாக வெளியேறும். அவர்கள் நிற்கும் போது இவை சரியாக நடப்பதில்லை.

நின்றுகொண்டே சாப்பிடுவது உணவுகள் செரிமான மண்டலத்துக்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. உணவு நுண் துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.​

உணவை அதிகரிக்க செய்யலாம்

நின்று கொண்டே சாப்பிடும் போது உணவு வேகமாக கீழே இறங்குகிறது. இதனால் சரியான அளவு சாப்பிட்டிருக்கோமோ என்பதே தெரியாத அளவுக்கு சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள். அதிக அளவு உணவு எடுக்க நேரிடலாம். பசி நிறைந்த உணவை நீங்கள் எப்போதும் உணர மாட்டீர்கள்.

உட்கார்ந்து சாப்பிடும் போது நிதானமாக சாப்பிடுவதன் மூலம் குறைந்த உணவே நிறைவான உணவு திருப்தி அளிக்கும். கூடுதலாக கலோரிகளை எளிதாக எரிக்கும்.

​பசித்துகொண்டே இருக்கும்

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகும் வரை உணவு எடுக்க கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் நின்று கொண்டே சாப்பிடும் போது உணவு சீக்கிரமே செரிமானம் ஆகிறது உணவில் இருக்கும் ஊட்டச்சத்து உறிஞ்சப்பட்டு உணவு நுண் துகள்களாக மாறுவதற்குள் அவை குடலை அடைந்து விடுகிறது. இதனால் நீங்கள் சாப்பிட்ட சில மணி நேரங்களில் மீண்டும் பசி எடுக்க தொடங்கும்.​

வாய்வு சேரும்

விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. அது செரிமான பிரச்சனையை மட்டும் உண்டாக்காமல் இன்னும் பல வயிற்று கோளாறையும் உண்டாக்கிவிடும். நின்றுகொண்டே சாப்பிடும் போது உணவு ஊட்டச்சத்து உறிஞ்சுவதற்கு முன்னரே செரித்து விடுகிறது. இந்த சத்துக்கள் வாயுவாகி உடலில் தேங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை உண்டாக்கிவிடும்.

குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத நிலையில் அது வீக்கத்தை உண்டாக்கும் அபாயமும் உண்டு. உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

Related posts

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

கறுப்பு உளுந்து சுண்டல்

nathan

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறையவும், அதிகரிக்கவும் எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்?

nathan

இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழம் தெரியாமகூட சாப்பிட வேண்டாம்… அல்லது ஆபத்தானது…!

nathan

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன! ஊட்டச்சத்து பானங்களை குடிப்பதால் ஆபத்து?

nathan

டயட்டில் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan