கர்ப்பத்தின் போது தாய் சாப்பிடும் உணவுதான் குழந்தையின் ஆரோக்கியம் மட்டுமல்லாது அறிவுத் திறனையும் நிர்ணயிக்கிறது.
அதிக காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் தாய்க்கு அறிவாளியான பிள்ளை கிடைக்கும் என ஆய்வுகள் கூருகின்றன. சரி. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் கருவிற்கு எத்தகைய பாதிப்பு உண்டாகும் என அறிவீர்களா?
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? சரியாக உணவு எடுத்துக் கொள்கிறீர்களா? நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணாக. மீட்டிங்குகள் ப்ராஜெக்ட்ஸ் என மிகவும் பரபரப்புடன் செயல்படும் பெண்ணாக இருக்கலாம்.
what happens when pregnant mothers dont eat properly
ஆனால் தாய்மையடையும்போது நீங்கள் உங்கள் உணவைப்பற்றிய அக்கறையை புறந்தள்ள முடியாது.
ஊட்டச்சத்துக் குறைபாடு பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்த மாதிரியான சிக்கல்கள் என விரிவாக பார்க்கலாம்.
நரம்பு தொடர்பான குறைபாடுகள் :
தாய்மார்கள் சரியாக உணவு உண்ணாத போது, அது ஊட்டச்சத்து குறைப்பட்டால் பல நரம்பு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
சில வேளைகளில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். மற்றும் சில நேரங்களில் அனைத்தும் சரியாகத் தெரிந்தாலும் உங்கள் குழந்தை கற்றல் குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம்.
கருவில் உள்ள குழந்தை அல்லது கரு இழப்பு :
நீங்கள் ஒரு ஊட்டச்சத்து குறைப்படுள்ள தாயாக இருந்தால் நீங்கள் உங்கள் கருவில் உள்ள குழந்தையையோ அல்லது குழந்தை பிறந்து குழந்தை பருவத்திலோ அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
இது மிகவும் அரிதாக நிகழ்ந்தாலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பளிக்காமல் உங்கள் ஊட்டச்சத்து மிக்க ஆகாரத்தில் கவனம் செலுத்துங்கள்.
பிறந்த குழந்தையின் எடை குறைவு :
தாய்மையடைந்திருக்கும்போது ஊட்டச்சத்து குறைவுள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் நீங்கள் எடை குறைவான குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் அது குழந்தை வளரும்போதும் எடை குறைவாக இருக்கவே செய்வதோடு அடிக்கடி குழந்தைகள் உடல் நலனுக்கு பெருந்தீங்குகள் ஏற்படவும் சில வேளைகளில் குழந்தையின் முதல் சில வயதுகளில் இரைப்பைக்கு கூட ஏற்படுத்தக்கூடும்.
வளர்ச்சி குறைவு :
நீங்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றாலோ அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைவாகக் கொண்டிருந்தால் உங்கள் குழந்தை உங்கள் உடம்பில் உள்ள சத்துப் பற்றாக்குறை காரணமாக மிகவும் மெதுவாக வளரும்.
குறைந்த கலோரிகள் எண்ணிக்கை :
முதல் மூன்று மாதத்தில் நீங்கள் சுமார் 2200 கலோரிகள் உட்கொண்டு படிப்படியாக அதை இரண்டாவது மற்றும் மூன்றாவது மும்மாதங்களில் 2300 முதல் 2500 கலோரிகள் வரை உயர்த்தி உண்ண வேண்டும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்ணுங்கள் :
நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு தவறாமல் உண்ணுவதை பழகுங்கள். உங்கள் குழந்தை உங்கள் உடலில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்வதால் நீங்கள் உணவில் கவனம் செலுத்தவில்லையென்றால் உங்கள் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும்.
கால்சியம் குறைபாடு ஆபத்தானது :
உங்கள் குழந்தைக்கு கால்சியம் அல்லது சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம். இதை நீங்கள் தேவையான அளவு உட்கொள்ளாவிட்டால் உங்கள் குழந்தை அதை உங்களது பல் மற்றும் எலும்புகளில் இருந்து எடுத்துக் கொண்டுவிடும்.
இது உங்களுக்கு மூட்டு அழற்சி (ஆர்திரிடிஸ்) மற்றும் மூட்டு இசிவு நோய்களுக்கு (ஆஸ்டியோபோரோசிஸ்) வழி வகுக்கும்.
போலிக் அமிலக் குறைபாடு நரம்பு தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தும் :
போலிக் அமிலம் கர்ப்பத்தின் துவக்க நாட்களில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று. இதன் குறைபாடு நரம்புத் தொடர்பான குறைபாடுகளுக்கு வித்திடும்.
ஆய்வுகளின் படி போலிக் அமிலம் தேவையான அளவு எடுத்துக் கொண்ட தாய்மார்களின் பிள்ளைகளைக் காட்டிலும் குறைவாக எடுத்துக் கொண்ட தாய்மார்களின் பிள்ளைகளுக்கு குறைப்பிரசவத்திற்கு வாய்ப்புகள் இருமடங்கு உள்ளது.
எனவே போலிக் அமிலம் நிரம்பிய நிறைய பச்சை காய்கறிகளையும் கீரை மற்றும் ப்ரோக்கோலி, அவகாடோ, புளிப்பு (எலுமிச்சை ஆரஞ்சு போன்ற) பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.