25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடி மரணமா?

மூளையில் உள்ள cerebovascualr – ல் ஏற்படுகின்ற திடீர் மாற்றத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தக்கசிவு ஏற்படுவதே Apoplexy ஆகும். அதாவது இந்த திடீர் மாற்றத்தால், மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை வழங்கும் பணியை செய்யும் ஆர்ட்டரி(Arteries) அல்லது ரத்த நாளங்கள்(Blood Vessels) தடுக்கப்படுகிறது.

இதனால் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் இன்றி மூளை செல்கள் சில நிமிடங்களிலேயே இறந்துவிடுகின்றன. இதன் காரணமாக உடனடி மரணம் அல்லது சுயநினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

காரணங்கள்

மூளையில் அதிகமான இரத்தம் இருந்தால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது, இதற்கு இரத்தப்பெருக்கு என்று பெயர் (hemorrhagic stroke), இந்த இரத்தப்பெருக்கு மூளையில் சிதைவுகள் அல்லது இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அடுத்தவகையாக மூளையில் குறைவான அளவு இரத்தம் இருப்பதன் காரணமாக ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதன்று ischemic stroke என்று பெயர். இதன் வகையால் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு ரத்தசெல்கள் இறந்துவிடுகின்றன, 85 சதவீதம் பேர் இந்தவகையால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

அறிகுறிகள்

தாங்கமுடியாத தலைவலி, முகம் மற்றும் கண்களிக்கிடையே வழக்கத்திற்கு மாறான வலி ஏற்படுதல். பார்வைத்திறன் குறைதல், ஒரு பொருளை பார்க்கும்போது மங்கலாக தெரிவது அல்லது இரண்டாக தெரிவது. பிறரிடம் பேசுவதற்கும் பிறர் பேசுவதை புரிந்துகொள்வதற்கும் கடினமாக இருக்கும். பலவீனம், அசைவின்மை மற்றும் உடலின் ஒரு பக்கத்தின் உணர்வின்மை. செய்யும் செயல்களை ஒருங்கிணைக்க இயலாமல் திணறுதல். வாழ்வில் குழப்பம் மற்றும் வெளிசார்ந்த பிரச்சனைகள். பொதுவாக ரத்தக்கசிவு நோயானது உடலில் எவ்வித முன்னெச்சரிக்கையும் கொடுப்பதில்லை.

கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைகள்

அறிகுறிகளை வைத்து மூளையில் மாற்றங்கள் இருப்பதை CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம். நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் இதிலிந்து காத்துக்கொள்ளலாம், சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது, குறிப்பிட்ட அளவில் ஆல்கஹால் அருந்த வேண்டும். அதிக அளவு கொழுப்பான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம், மேலும் உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. காய்கறிகள் பழங்கள் தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்காய்கறிகள் பழங்கள் தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

Aspirin, Warfarin மற்றும் Antiplatelet மருந்துகளை உட்கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள், ஏனெனில் இந்த மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. Plaque மூளையில் ரத்தம் உறைவதில் பங்கு வகிக்கிறது, எனவே cartoid endarterectomy வழிமுறைய பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஆர்ட்டரியில் இருந்து Plaque நீக்கப்படுவதால் திடீரென மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறைகிறது. அதுமட்டுமின்றி, முறையான உடற்பயிற்சி, பிறரிடம் பேசுவதற்கு முறையாக சிகிச்சைகள், தியானம் போன்றவை மூலம் குறைக்கலாம்.

Related posts

உங்கள் காதலை வலியில்லாமல் பிரிவதற்கான வழி!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

nathan

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

40 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் எடையை குறைக்கணுமா?உங்களுக்காக டிப்ஸ்!!

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

எந்த கஷ்டமும்படாம உங்க உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா -அற்புதமான எளிய தீர்வு

nathan

மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் போதுமாம்…!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan