பிரசவத்திற்குப் பின், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். இக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு அந்த சுழற்சி ஆரம்பமாகும்.
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்
பிரசவத்திற்கு பின், பெண்கள் மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை அந்த சுழற்சி தாமதமானால், அதுவே பெண்களின் பெரும் மனக் கவலையாக இருக்கும். பொதுவாக பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு இருக்கும்.
ஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதால், பிரசவத்திற்கு பின்னும், தாய்ப்பால் கொடுக்கும் போதும், உடனே மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்க்க முடியாது. சில பெண்களுக்கு யோனியில் இருந்து சிவப்பு நிறத்தில் கசிவு ஏற்படும்.
பல பெண்களும் இதை தவறாக மாதவிடாய் சுழற்சியால் தான் ஏற்பட்டுள்ளது என்று நினைப்பார்கள். ஆனால் இந்த லேசான கசிவு இரத்தம் கலந்த சளியாக கூட இருக்கலாம். சரி, இப்போது இதுக்குறித்த சில தகவல்களைக் காண்போம்.
பிரசவத்திற்குப் பின், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். இக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு அந்த சுழற்சி ஆரம்பமாகும். பொதுவாக பிரசவம் முடிந்து 6-7 வாரத்திற்கு பின் பெண்களுக்கு முதல் மாதவிடாய் சுழற்சி வரும்.
பல பெண்களுக்கு கடுமையான இரத்தக்கசிவு ஏற்படும். இப்படி அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும் போது, பல பெண்களும் அச்சம் கொள்வார்கள். ஆனால் இது சாதாரணமானது தான். இருப்பினும், மன நிம்மதிக்கு வேண்டுமானால் மருத்துவரிடம் செல்லுங்கள். பிரசவத்திற்கு பின், இரத்தப்போக்கு சில நாட்கள் அல்லது பல நாட்கள் இருந்தால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
புதிதாக தாய்மை அடைந்த பெண்கள் சிலருக்கு, பிரசவத்திற்கு பின் வரும் மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும். சில நேரங்களில் குமட்டல், மனநிலையில் ஏற்ற இறக்கங்கள், தலைச்சுற்றல் போன்றவை கூட ஏற்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிலருக்கும், மாதவிடாய் சுழற்சி தாமதமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவோம்.
பிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.