28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
mil News Bleaching face problem SECVPF
முகப் பராமரிப்பு

அழுக்குகளை நீக்க வீட்டிலேயே செய்யலாம் பிளீச்சிங்

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.

Related posts

பெண்களே ஃபேஸ் வாஷுக்கு பதிலா இந்த பாரம்பரிய பொடியை தேய்த்து பாருங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான பேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சிவப்பழகை பெற

nathan

முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்…

nathan

அவசியம் படிக்க..முகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா?

nathan

இதோ எளிய நிவாரணம் முக‌ப்பரு மறைய ‌மிளகு

nathan

உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வசீகரமான முகத்தை பெற இதைச் செய்தாலே போதும்!

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்..!

nathan