25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15597
ஆரோக்கிய உணவு

வாரத்திற்கு இருமுறை கட்டாயம் ப்ரோக்கோலி சாப்பிடுங்க

தண்ணீர் சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் ப்ரோக்கோலி உடலின் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.

எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த ப்ரோக்கோலி சிறந்த பலனைத்தரும்.

முக்கியமாக ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது.

மேலும் இதில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோயிலிருந்து பாதுகாக்கின்றது.

ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.

ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி அது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விட்டமின் சி மிக முக்கியம் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

nathan

மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..

nathan

உடல் சோர்வு அதிகம் உள்ளதா? உணவை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

வாழைப்பழ மோர் குழம்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

நீங்கள் அதிகமாக கடைகளில் சாப்பிடும் நபரா ? அவசியம் படியுங்கள் !

nathan

சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாமா?

nathan