28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
156379204
ஆரோக்கிய உணவு

திராட்சையில் இப்படி ஒரு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறதா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.

கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

மேலும், எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.

மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரிக், டர்டாரிக் போன்ற அமிலங்கள் இருப்பதால் இவை ரத்தத்தில் உள்ள நச்சை சுத்திகரித்து மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கு உதவுகின்றன.

இதுதவிர சிறுநீரகங்களுக்கும் பக்கபலமாக இருக்கக்கூடியது. குடல் புண் உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால், குடல்புண் குணமாவதுடன் குடல் வலிமை பெறும். மூல நோய்களை போக்கக்கூடியது. சில நேரங்களில் சிலருக்கு உடல் முழுவதும் எரிவதுபோன்ற உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், உண்மையாகவே உடம்பில் எரிச்சல் உண்டாகும்.

Related posts

சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்

nathan

அடுப்பில்லை, எண்ணெயில்லை… ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை!

nathan

சிவப்பு அவலில் சத்தான டிபன் செய்யலாம் வாங்க…

nathan

பூண்டை வறுத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

nathan

சூப்பர் டிப்ஸ்! எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

nathan

உங்க இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர்

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan