வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எப்போதும் பாதுகாப்பு. ஆனால், அது அவர்களின் வெளிபுற பாதுகாப்புக்கு தான். உட்புற பாதுகாப்பிற்கு அதாவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நோய்எதிர்ப்பு சக்தியே முக்கியம். நோய்எதிர்ப்பு சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்றால் சத்தான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.
எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி பெற்றோர்கள் முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்து அதனை சாப்பிட வைத்தால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்வார்கள்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்றால் சரும அரிப்பு, இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது வயிற்று வலி. இவை அனைத்தும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதை எடுத்துக்காட்டும் அறிகுறிகளாகும்.
வளரும் குழந்தைகளின் நோய்எதிர்ப்பு தன்மை குறைந்தால் அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு அவர்களின் சுறுசுறுப்புத் தன்மையையும் குறைத்து மந்தமாக வெளிக்காட்டும்.
தற்போதைய ஆய்வு ஒன்றில், 81% வளரும் குழந்தைகள் போதுமான சத்துக்களான இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை கிடைக்காமல் மிக சோர்வான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கே ஒவ்வொரு சத்துக்கள் பற்றிய முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்…