24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
151068
மருத்துவ குறிப்பு

பாத வெடிப்பை சீக்கிரமாக சரிசெய்ய வேண்டுமா?டிப்ஸ் இதோ….!

பாத வெடிப்பு என்பது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது.

இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில்., புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். பாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும்., உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது.

நாள்தோறும் உறங்குவதற்கு முன்னதாக பாதத்தில் மாய்சுரைசர் அல்லது வாசலினை தடவிய பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்கினால் பாதங்கள் மிருதுவாகி பளபளப்பாக மாறும். தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்., நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறைய துவங்கும். பப்பாளி பழத்தினை நன்றாக அரைத்து., பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பானது மறைந்துவிடும்.

மருதாணியின் இலைகளை நன்றாக அரைத்த பாத வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பானது உடனடியாக குணமாகும். எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும். கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

மேலும், பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம்.

Related posts

லதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்… (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை…

nathan

அவசியம் படிக்க.. வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்

nathan

பிள்ளைகள் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்

nathan

சித்த மருத்துவத்தில் கூறப்படும் அழகுக் குறிப்புகள்

nathan

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

nathan

உங்களுக்கு வாய் துர்நாற்றத்தால் கவலையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தினமும் 4 கப் காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு

nathan

புற்றுநோய்க்கு… மருந்தாகும் மசாலா பொருட்கள்!

nathan

தள்ளிப் போடாதே!

nathan