கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும்.
அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.
அதிலும் பொடுகை விரட்ட நமது வீட்டு சமையறை பொருட்களில் ஒன்றான வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது வெந்தயத்தை வைத்து எப்படி பொடுகை விரட்டலாம் என்பதை பார்ப்போம்.
தேவை
- வெந்தய பொடி – 2 டீஸ்பூன்
- நெல்லிபொடி – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
- பொடிகள் இரண்டையும் மென்மையாக ஆகும் வரை கலக்கி எடுக்கவும். இந்த கலவையை தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
- வாரத்தில் ஒருமுறையாவது இதை செய்து கொள்ளுங்கள். பொடுகு நீங்கும் வரை இதை செய்யலாம். நெல்லி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
- இது எலுமிச்சை சாறுடன் இணைந்து உச்சந்தலையில் வைட்டமின் சி ஏற்றுகிறது. இந்த பேக் பொடுகை கொல்ல உதவுகிறது.
- இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஹேர் பேக் போடுவதன் மூலம் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.