22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
evening snacks chicken bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சிக்கன் போண்டா

தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா – கால் கிலோ,

சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

Related posts

கடலைப் பருப்பு போளி

nathan

விருதுநகர் புரோட்டா

nathan

கொள்ளு மசியல்

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

இலகுவான அப்பம்

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

பீச் மெல்பா

nathan

ஸ்வீட் கார்ன் சௌடர்

nathan

இந்த கேக் செய்து பாருங்க- 10 நிமிஷத்தில் காலியாகிடும்

nathan