01 carrot beetroot juice
ஆரோக்கிய உணவு

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

மாலையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வண்ணம் ஜூஸ் ஏதாவது கொடுக்க நினைத்தால், கேரட் பீட்ரூட் ஜூஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் ஜூஸ்களில் ஒன்று. மேலும் குழந்தைகளும் இதை விரும்பி குடிக்கும் வண்ணம் இருக்கும்.

இங்கு அந்த கேரட் பீட்ரூட் ஜூஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை செய்து கொடுத்து, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.

Carrot Beetroot Juice Recipe
தேவையான பொருட்கள்:

கேரட் – 3 (சிறியது)
பீட்ரூட் – 1 (சிறியது)
இஞ்சி – 1/4 இன்ச்
தண்ணீர் – 1/4 கப்
ஐஸ் கட்டிகள் – சிறிது
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டின் தோலுரித்து, அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை, இஞ்சி துண்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, இன்னும் நன்றாக அரைத்து, அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கேரட் பீட்ரூட் ஜூஸ் ரெடி!!!

Related posts

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

அடேங்கப்பா! பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா…?

nathan

உணவில் எதற்காக ஊறுகாய் சேர்க்கப்படுகிறது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

உங்களுக்கு தெரியுமா கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

nathan

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் 5 உலர்திராட்சை செய்யும் அற்புதம்

nathan

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan