35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
5 Thyroid Skin Infections SECVPF
மருத்துவ குறிப்பு

ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்

நமது உடல் சரியாக இயங்குவதற்கு தைராய்டு ஹார்மோன் சீராக சுரந்துகொண்டிருக்கவேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை ஏற்பட்டால் அது உடலில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகி விடும். அதோடு பெண்களுக்கு பல்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் உருவாக்கும். உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைவதை ஹைப்போதைராடிஸம் என்றும், அதிகரிப்பதை ஹைப்பர்தைராடிஸம் என்றும் அழைக்கிறோம்.

ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:

சருமம் விளறிய நிலையில் காட்சியளிக்கும். சுருக்கங்களும் அதிகம் தென்படும். இது ‘மிக்ஸெடிமா’ என்று அழைக்கப்படுகிறது.

சருமத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். அதை தொடர்ந்து சருமம் குளிர்ச்சித்தன்மையை அடையும்.

கை, கால் சருமம் மிருதுத்தன்மையை இழந்து கெட்டியாகி, வறண்டு காணப்படும். இந்த பாதிப்பை ‘கெராட்டோடெர்மா’ என்று அழைப்பார்கள்.

கை, கால்களின் உள்பகுதி மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த பாதிப்பிற்கு ‘கரோட்டெநிமீயா’ என்று பெயர்.

முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.

நகங்கள் வளர்ச்சி குறைவதோடு பலமிழந்தும் காணப்படும். தைராய்டு ஹார்மோனின் அளவு வெகுவாக குறைந்து போகும்போது உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கும் நாளாகும். உடல் உற்பத்தி செய்யும் வியர்வையின் அளவும் குறைந்துகொண்டிருக்கும். சருமம் பொலிவிழந்து வித்தியாசமாக காட்சியளிக்கும்.

ஹைப்பர்தைராய்டிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:

சருமத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் சரும சீதோஷ்ண நிலை சூடாக காணப்படும். முகம், கை கால்களின் உள்பகுதி சிவந்து கெட்டியாக தோன்றும்.

கூந்தல் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றினாலும், கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகும் நிலையை அடையும்.

நகம் வளைந்து வித்தியாசமான வடிவத்தில் வளரும். நகம் முழுவதும் ஒரே நிறத்தில் தோன்றாமல் முரண்பாடான நிறங்களுடன் காட்சியளிக்கும்.

உடலில் அதிகமாக வியர்வை தோன்றும். குறிப்பாக உள்ளங்கை, பாதத்தின் உள்பகுதிகளில் வியர்வையின் அளவு அதிகமாக இருக்கும்.

சருமத்தில் மொத்தமாகவோ, ஆங்காங்கோ நிறமாற்றம் காணப்படும்.

கணுக்கால் மற்றும் பாதங்களில் இளம் சிவப்பு அல்லது தவிட்டு நிறத்தில் பருக்கள் தோன்றுதல், இளநரை உருவாகுதல், முடியின் நிறம் மங்குதல் போன்றவைகளும் ஹைப்பர்தைராடிஸத்தின் அறிகுறிகளாகும். முறையான சிகிச்சையால் இந்த பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

Source:maalaimalar

Related posts

உங்களுக்கு தெரியுமா கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது?

nathan

அவுரி இலை பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது !

nathan

லவ்வர் கூட சண்டையா? இந்த 7 விதிகள் உங்களைக் காப்பாத்தும்!

nathan

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

nathan

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் கருத்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை

nathan

தொண்டை வலி தீர வழிகள்.

nathan

அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா?

nathan