28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
blood pressure
மருத்துவ குறிப்பு

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கை சிகிச்சைகள்!!!

இன்றைய வாழ்க்கை முறை நாகரீகமாக மாறி விட்டாலும் அதனுடன் தொடர்புடைய நோய்கள் ஏமாற்றத்தை தரும் ஒரு விஷயமாக உள்ளது. எந்தளவிற்கு நாகரீகத்தை நோக்கி நாம் செல்கின்றோமோ அதே வேகத்தில் நோய்களும் நம்மை வந்தடைகிறது. அதில் சில நோய்கள் மிகவும் ஆபத்தை உண்டாக்குவதாகவும் உள்ளது. மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படும் காரணத்தினாலும் சில நோய்கள் தோன்றும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இரத்த அழுத்தம்.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!

இரத்த அழுத்தம் என்பது உடல்நலத்திற்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் மிக ஆபத்தான நிலையாகும். இன்றைய தலைமுறையினருக்கு இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது அழுத்தமே. இதய நோய்கள், வாதம் போன்ற நோய்களை தவிர மரணம் ஏற்படும் வாய்ப்புகள் கூட இதனால் அதிகம். அதனால் இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்திட வேண்டும் என்றால் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை சாப்பிடுவது போக, சில வீட்டு சிகிச்சைகளையும் சேர்த்து பின்பற்றுங்கள்.

எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…

பூண்டு

இரத்த கொதிப்பு சற்று அதிகமாக உள்ளதென்றால், பூண்டு உங்களுக்கு உதவிடும். பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. இது தமனிகளின் தசைகளை அமைதி பெறச் செய்யும். இதனால் இதய விரிவியக்க இரத்த கொதிப்பு மற்றும் சுருக்கியக்க இரத்த கொதிப்பு என இரண்டுமே குறையும்.

பூண்டை எப்படி பயன்படுத்துவது?

நற்பதமான பூண்டை கொஞ்சம் எடுத்து, அதன் தோலை உரித்து, அதனை லேசாக தட்டி அப்படியே சாப்பிடவும். இரத்தத்தை மெலிதாக்கும் தன்மையை பூண்டு கொண்டுள்ளதால், இரத்தத்தின் உறையும் தன்மை குறையும். மேலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே பூண்டு சம்பந்தப்பட்ட பொருட்களை உண்ண வேண்டும்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி செடியை தென்னிந்தியாவில் உள்ள பல வீட்டு தோட்டத்தில் காணலாம். மென்மையான தமனி தசைகளை அமைதி பெறச் செய்ய இது உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. இதனால் இரத்த கொதிப்பு குறைய அது உதவும். இது இதயத் துடிப்பை திடமாக்கி நாடித்துடிப்பை மெதுவாக்கும். கற்பூரவள்ளி சேர்க்கப்பட்டுள்ள மாத்திரைகள் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை வயதானவர்கள் உட்கொண்டால் அவர்களின் இரத்த கொதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் என சில ஆய்வுகள் கூறுகிறது.

முருங்கை கீரை

முருங்கையில், உயரிய புரதச்சத்து மற்றும் மதிப்பு மிக்க வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை கொண்டுள்ளது. முருங்கை கீரைகளில் எடுக்கப்படும் சாற்றைப் பயன்படுத்தினால் இதய விரிவியக்க இரத்த கொதிப்பு மற்றும் சுருக்கியக்க இரத்த கொதிப்பு என இரண்டுமே குறையும்.

முருங்கை கீரை எப்படி பயன்படுத்துவது?

முருங்கை கீரை பருப்புகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு, அதனால் கிடைக்கும் பயன்களை பெற்றிடுங்கள்.

நெல்லிக்காய்

இரத்தக் கொதிப்பை குறைக்க பல ஆண்டு காலமாக நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காய் செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் நீர், இதய விரிவியக்க இரத்த கொதிப்பு மற்றும் சுருக்கியக்க இரத்த கொதிப்பு ஆகியவற்றை குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. இதுப்போக இரத்தம் மற்றும் கல்லீரலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்த குழாய்களை விரிவாக்க உதவும். இதனால் இரத்த கொதிப்பும் குறையும்.

முள்ளங்கி

இந்திய சமயலறையில் மிக பொதுவாக காணப்படும் இந்த காய்கறியும் கூட இரத்த கொதிப்பை குறைக்க உதவுகிறது. முள்ளங்கியில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளதால், உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள உணவுகளால் ஏற்படும் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த இது உதவும்.

முள்ளங்கியை எப்படி பயன்படுத்துவது?

முள்ளங்கியை நன்றாக வதக்கி உண்ணலாம். அப்படி இல்லையென்றால் அதனை அப்படியே பச்சையாகவும் கூட உண்ணலாம். இல்லாவிட்டால் அதனை தயிருடன் கலந்து சுவைமிக்க ரைத்தாவாகவும் சாப்பிடலாம்.

எள்

எள் விதைகள் இதய விரிவியக்க இரத்த கொதிப்பு மற்றும் சுருக்கியக்க இரத்த கொதிப்பு ஆகியவற்றை குறைக்க உதவும் என சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளது. எள் எண்ணெயில் சீசாமின் மற்றும் சீசாமினோல் என்ற இரண்டு பொருட்கள் உள்ளது. உடலில் உள்ள நச்சுத்தன்மை அழுத்தத்தை குறைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. தமனி சுவர்களில் ஏற்படும் அழற்சியை நீக்கும் குணங்களை கொண்டுள்ளது. இதனால் இரத்த கொதிப்பு குறையும். எள் எண்ணெய்யை தவிட்டு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், இரத்த கொதிப்பிற்கு மாத்திரைகள் உண்ணுவதை காட்டிலும் இது சிறந்து செயல்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறியுள்ளது.

சர்பகந்தா

தூக்கமின்மை, பாம்பு கடி மற்றும் இரத்த கொதிப்பிற்கு சிகிச்சை அளிக்க பல ஆண்டு காலமாக சர்பகந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செடியில் இருந்து எடுக்கப்படும் காரப்போலி ரெசெர்பைன், இரத்த கொதிப்பிற்கான ஆரம்ப கட்ட மருந்துகளில் ஒன்றாகும். இது இரத்த குழாய்களை விரிவடைய செய்து, இதயத் துடிப்பைக் குறைக்கும். இதனால் இரத்த கொதிப்பு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இந்த வேரின் பொடி மற்றும் மாத்திரைகள் என இரண்டுமே கிடைக்கக்கூடியவை தான் என்றாலும் கூட, மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆளி விதை

ஆளி விதையில் அல்ஃபா லினோலெனிக் அமிலம் என்ற பொருள் வளமையாக உள்ளது. இது முக்கியமான ஒமேகா-3 கொழுப்பமிலங்களில் ஒன்றாகும். இரத்த கொதிப்பால் அவதிப்படுபவர்கள், தங்கள் உணவில் ஆளி விதையை சேர்த்துக் கொண்டால், அவர்களின் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதனால் இரத்த கொதிப்பும் குறையும்.

குறிப்பு

இரத்த கொதிப்பிற்கு சிகிச்சை அளிக்க இந்த மூலிகை சிகிச்சைகள் நல்ல பலனை அளித்தாலும் கூட, இந்த சிகிச்சைகளால் பல வித தாக்கங்களும் கூட ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அதிக இரத்த கொதிப்பு இருந்தால், இந்த சிகிச்சைகளை பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள். இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க பிற நடவடிக்கைகளை பற்றியும் மறந்து விடாதீர்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா? அது தான், பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை குறைத்தல், உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ளுதல், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுதல் மற்றும் மன அழுத்தத்தை போக்க சில நுட்பங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்

nathan

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!

nathan

வாய் துர்நாற்றமா? யாரும் பக்கத்துல வரதில்லையா? இத வெறும் 5 நாட்கள் சாப்பிட்டா போதும்!

nathan

வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்கள்

nathan

உங்களுக்கு சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கான காரணங்கள் தெரியுமா?

nathan

மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்

nathan

கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்! இந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க…

nathan