24.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
21 612224c9309b6
அழகு குறிப்புகள்

குளியலறையில் வெப் கேமராவை வைத்த பக்கத்துவீட்டுகாரர்

தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் தெற்குவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

இதனிடையே கடந்த நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது(35) என்பரை கைது செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வெங்கடேஷன் கூறுகையில் எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது, திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை, மாடியில் இருந்து பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் தந்தையிடம் சொன்ன போது, எங்களிடம் அடிக்கடி சண்டைக்கு வந்தார். எங்கள் வீட்டின் பின்புறம் குளியலறை உள்ளது. குளியலறையொட்டி இன்னொருவருக்கு சொந்தமான காலி வீடு உள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டை சுற்றி காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமது கொடுத்துள்ளனர்.

இதனைப்பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை பார்த்துள்ளார்.

தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !2023ல் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !!

nathan

சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி -மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை…

nathan

உங்களுக்கு பசி எடுக்க மாட்டேங்குதா ?அப்ப இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள்….

nathan

குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள்

nathan

புருவம் அழகினை மேம்படுத்த நவீன ‘புருவத்தை பயிர்செய்’

nathan

உங்களுக்கு வெள்ளையான சருமம் வேணும்னு ஆசையா? அப்ப இத படிங்க!..!

nathan

ஐ அம் ரெடி.. 2-வது திருமணம்…? வெட்கத்தில் மீனா வெளிட்ட வீடியோ..

nathan

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

சூப்பர் டிப்ஸ்.. பிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…!

nathan