28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
vy gourd fry
ஆரோக்கிய உணவு

கோவைக்காய் வறுவல்! சுவையாக இருக்கும்….

பலருக்கு கோவைக்காயை பார்த்தாலே பிடிக்காது. ஏன் என்று கேட்டால், அதற்கு காரணம் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது என்பது தான். ஆனால் அதனை சரியான சுவையில் சமைத்து சாப்பிட பழகிவிட்டால், அதன் சுவைக்கு பலர் அடிமையாகிவிடுவோம். ஏனெனில் அந்த அளவில் கோவைக்காயானது மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் இந்த காய்கறியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

சரி கோவைக்காயை எப்படி சமைப்பதென்று கேட்கிறீர்களா? அதை வறுவல் போன்று செய்து சுவைத்தால், உண்மையிலேயே அட்டகாசமாக இருக்கும். இப்போது அந்த கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரட்டி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கினால், கோவைக்காய் வறுவல் ரெடி!!!

Related posts

சமைக்கும் போது உப்பை கையில் எடுத்து போட்டால் பணம் கொட்டுமாம்!

nathan

தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்… நன்மைகள் ஏராளமாம்!

nathan

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan

இயற்கை தரும் கோடை பாதுகாப்பு வெள்ளரிக்காய்

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா…?

nathan

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

nathan

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?

nathan

அரிசி தரும் அரிதான நன்மைகள்

nathan

மீண்டும் சூடேற்றக்கூடாத விஷமாக மாறக்கூடிய உணவுகள்!!!

nathan