இளம் வயதினர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தொல்லையாக இருப்பது உடல் எடை. ஒரு சிலர் உடல் கொழுப்புக்களை குறைக்க வழி தெரியாமல் மற்றவர்களின் உதவியை நாடி வருகின்றனர்.
உணவு முறைகள் அடிக்கடி மாறி வருவதால் உடல் எடையும் அதற்கு ஏற்றாற்போல அதிகரித்து வருகின்றது. உடல் எடை கூடுவதால் நோய்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீர் கலந்து குடிப்பதால் உடல் எடையை உறுதியாக குறைக்கலாம். சரி வாங்க இந்த இரண்டையும் எப்படி பயன்படுத்துவது குறித்து பார்க்கலாம்..
பலன்கள்:-
தினமும் காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.
இதில் வைட்டமின் சி மற்றும் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் இருப்பதால் ஒரு சிறந்த செரிமான ஆதாரமாக பயன்படுகிறது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு சக்திகளை கரைக்கவும் சிறப்பாக உதவுகின்றது.
எலுமிச்சை நீரின் மற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பொறுத்தவரை இது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் சருமத்திற்கு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் அது கலோரிகளின் அளவைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி தோல் சுருக்கம், வறண்ட சருமம் முதுமை மற்றும் சூரியனால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. உடலில் பலவகை நன்மைகளுக்கு எலுமிச்சை முக்கிய பங்காற்றும்.