21.6 C
Chennai
Saturday, Dec 13, 2025
14c515a
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா?

சிலருக்கு இரவில் நல்ல தூக்கம் என்பதே இருக்காது. ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் அவர்களுக்கு தூக்கம் கலைந்து விடும். இரவில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் உடல்ரீதியாக பல பிரச்சனைகள் சந்திக்கநேரிடும்.

ஒருவருக்கு குறைந்தது 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் தேவை. அப்போது தான் மறுநாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் அன்றாட வேலைகளை பார்க்க முடியும்.

இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யபட்டுள்ளது.

இரவில் நிம்மதியாக தூங்க சாப்பிட வேண்டிய உணவுகள்:-

வாழைப்பழத்தில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் இரவில் நிம்மதியாக தூங்க உதவியாக இருக்கின்றது.
பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இதனால் தினமும் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான பால் பருகுவதால் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுத்து தூக்கத்தை தூண்ட வழி செய்கிறது.
செர்ரி பழங்களில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளதால் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. மனச்சோர்வு, கவலைகள் போன்றவை மறந்து மனதை நிம்மதியாக இருக்க வைக்கின்றது.

தினமும் பாதாம் எடுத்து கொள்வது உடலுக்கு பல ஆரோக்கியங்களை தேடி தருகின்றது. அதுவும் இரவு நேரத்தில் எடுத்து கொண்டால் மூளையின் நரம்புகளை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை உண்டாக்கும்.
டார்க் சாக்லேட்டில் இயற்கையாகவே செரோடோனின் உள்ளதால் நன்றான தூக்கத்தை கொடுக்கும்.

Related posts

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan

இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

வெங்காயத்தை படுக்கைக்கு அருகில் அல்லது கீழ் பகுதியில் வைத்து கொண்டு தூங்க இத்தனை நன்மைகளா?…

sangika

ஆண் குழந்தை பிறக்க அட்டவணை – தாய்மார்கள் அதிகம் தேடும் விஷயங்களில் ஒன்று

nathan

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபாஸ்ட் புட் உணவு உண்பதை ஏன் முற்றிலும் தவிர்க்க வேண்டும்?

nathan

பெண்களிடம் ஆண்கள் பேச தயங்கும் விஷயங்கள்! அதற்கான காரணம் …

nathan

பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. அறிகுறிகள் என்ன..?

nathan

நீங்கள் நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan