26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
oats soup
ஆரோக்கிய உணவு

சுவையான சத்தான ஓட்ஸ் சூப்

உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இதனை மழைக்காலத்தின் மாலை வேளையில் சூப் செய்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவோம்.

மேலும் இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையில் கூட செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்….

Healthy Oats Soup Recipe
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
பால் – 2 கப்
ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
கேரட் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் கேரட் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் தேவையான அளவு உப்பு, உலர்ந்த கற்பூரவள்ளி இலை, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், ஓட்ஸ் சூப் ரெடி!!!

Related posts

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்!

nathan

சூப்பர் டிப்ஸ்! எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

nathan

இதோ மிளகின் மருத்துவ குணங்கள்பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

nathan

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan

விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்!

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சோள ரொட்டி

nathan

திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan