29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
raw banana varuval
​பொதுவானவை

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்

வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து வாயு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

ஆகவே வாழைக்காயை அஞ்சாமல் சாப்பிடுங்கள். இங்கு வாழைக்காய் மிளகு வறுவலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

Raw Banana Pepper Roast
தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 4-5
மிளகு – 2-3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சற்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும.

பின்னர் அதனை நீரில் போட்டு பாதியாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 3 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!

Related posts

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

nathan

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan

கேரளா இறால் கறி,TMIL SAMAYAL

nathan

திருமணம் இருவர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

nathan

கொள்ளு சுண்டல் செய்வது எப்படி

nathan

சூப்பரான பன்னீர் கார்ன் குருமா

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan