24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
16 kerala prawn pepper fry
அசைவ வகைகள்

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

என்னென்ன தேவை?

இறால் – 500 கிராம்,
வெங்காயம் – 2 (நறுக்கியது),
பூண்டு – 3 பற்கள்,
இஞ்சி – 1 இன்ச்,
பச்சை மிளகாய் – 3,
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது),
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து, அதனை இறாலுடன் சேர்த்து, அத்துடன், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு இறாலில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 6-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். இறுதியில் உப்பு சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பிரட்டி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!
16 kerala prawn pepper fry

Related posts

மீன் பிரியாணி

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan