28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
8 223
ஆரோக்கிய உணவு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக அள்ளித்தருபதில் நெல்லிக்காய் முதன்மையானதாகும். இன்றைய காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியம். இதற்கு நெல்லிக்கனி பெரிதுமே உதவுகின்றது.

இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது நல்லது. அப்படி முடியாதவர் நெல்லிக்கனி லோகியம் தினமும் ஒரு உருண்டை எடுத்து வரலாம்.

தற்போது இதனை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள் 

  • நெல்லிவற்றல் – 1 கிலோ
  • தண்ணீர் – அரை லிட்டர் அளவு
  • சர்க்கரை – 1 கிலோ
  • அதிமதுரம் -50 கிராம்
  • கூகைநீர் – 30 கிராம்
  • திராட்சை – 50 கிராம் (உலர் திராட்சை)
  • பேரீச்சம்ப்பழம் – 100 கிராம்
  • திப்பிலி – 50 கிராம்
  • சுத்தமான தேன் – 100 கிராம்
  • பசு நெய் – 100 கிராம்

செய்முறை  

நெல்லி வற்றலை தண்ணீரில் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி எடுக்கவும். எட்டுக்கு ஒன்று வீதம் தண்ணீர் வைத்து சர்க்கரை சேர்த்து பாகு கிளறவும்.

பிறகு வடித்து வைத்த வேக வைத்த நெல்லிக்காயை சேர்த்து அதில் அதிமதுரம், கூகை நீர், உலர் திராட்சை, பேரீச்சம்பழம், திப்பிலி அனைத்தையும் ஒவ்வொன்றாக அரைத்து வைத்து சேர்க்கவும். இப்போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிண்டவும். இறக்கியதும் ஏலத்தூள் சுக்குத்தூள், சேர்த்து கிளறி எடுக்கவும்.

நன்றாக மெழுகு பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும். அதனால் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

இறுதியாக அல்வா பதம் போல் வந்ததும் இறக்கி தேன் விட்டு கரண்டி அல்லது மத்து கொண்டு கட்டியில்லாமல் மசித்து எடுக்கவும். இதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம். அல்லது சிறு சிறு உருண்டைகளாக நெய் தொட்டு பிடித்தும் பதப்படுத்தலாம்.

சர்க்கரை பாகு நூல் பதம் வர வேண்டும். இல்லையெனில் லேகியம் வராது. நெல்லி வற்றலுக்கு மாற்றாக நெல்லிக்காயை அரைத்தும் செய்யலாம். ஆனால் இது நீண்ட நேரம் இருக்காது.

 எப்படி சாப்பிடுவது?

தினமும் உணவுக்கு முன் 5 முதல் 10 கிராம் வரை எடுத்துகொள்ளலாம். உருண்டையாக பிடித்து வைத்தால் சிறு நெல்லிக்காய் அளவு எடுத்துகொள்ளலாம். உணவுக்கு முன் காலை, மாலை என இரண்டு வேளை எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு கொடுக்கலாம். அளவு மிளகு அளவு இருக்கட்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கொடுக்கலாம்.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் வரை எடுக்கலாம். பிறகு மூன்று மாத இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் வரை எடுத்துகொள்ளலாம்.

Related posts

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

mudavattukal kilangu in tamil – முடவாட்டுக்கால் கிழங்கு சூப்…

nathan

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு – அமெரிக்க ஆய்வில் தகவல்

nathan

நம்பமுடியாத உண்ணக்கூடிய புரதம்: முட்டை மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள்

nathan

மணமணக்கும் மீன் பிரியாணி!வீட்டில் செய்து ருசியுங்கள்!

nathan

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகை – தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

திருமணத்திற்கு 10 பொருத்தம் பார்ப்பது எதற்காக தெரியுமா..? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan